தனியார் பள்ளிகளில் எட்டாம் வகுப்பு இலவச கல்வி!! 20-ம் தேதி முதல் விண்ணப்பம் தொடக்கம்!!

0
237
#image_title

தனியார் பள்ளிகளில் எட்டாம் வகுப்பு இலவச கல்வி!! 20-ம் தேதி முதல் விண்ணப்பம் தொடக்கம்!!

இலவச மற்றும் கட்டாய கல்வி சட்டத்தின் கீழ், தனியார் பள்ளிகளில் எட்டாம் வகுப்பு வரை இலவச கல்வி பயிலும் திட்டத்தின் கீழ், குழந்தைகளை சேர்ப்பதற்கான ஆன்லைன் பதிவு வரும் இருபதாம் தேதி துவங்குகிறது.

இலவச மற்றும் கட்டாய கல்வி சட்டத்தின் அடிப்படையில், சிறுபான்மையினர் அல்லாதவர் நடத்தக்கூடிய தனியார் பள்ளிகளில் ஆரம்ப நிலை வகுப்பில், அதாவது எல்கேஜி அல்லது முதலாம் வகுப்பில் இருக்கக்கூடிய மொத்த இடங்களில் 25 விழுக்காடு இடங்களை ஏழை எளிய, பொருளாதாரத்தில் நழிவடைந்த பிரிவினருக்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும் .

இந்தச் சட்டத்தின் அடிப்படையிலான மாணவர் சேர்க்கைக்கு ஆன்லைன் பதிவு வரும் இருபதாம் தேதி துவங்குகிறது.

தமிழகத்தில் உள்ள 12 ஆயிரம் தனியார் பள்ளிகளில் ஒரு லட்சத்து 50 ஆயிரம் இடங்கள் இந்த சட்டத்தின் கீழ் வருகின்றன.

பெற்றோர்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட பள்ளிகளில் தங்கள் குழந்தைகளை சேர்க்க ஆன்லைன் வழியில் பதிவு செய்யலாம். இது குறித்த முழுமையான அட்டவணை ஓரிரு தினங்களில் வெளியாக உள்ளது.

Previous articleகேன்சர் நோயின் தாக்கம் காரணமாக விரக்தியில் தண்டவாளத்தில் தலை வைத்து முதியவர் தற்கொலை!
Next articleமறைவாட்ட பொன் விழாவுக்கு தமிழக முதல்வர் அழைத்தால் தமிழக பாஜகவில் இணைந்து விடுவோம்-கிறிஸ்தவ பாதிரியார் பேசிய வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவல்!!