XBB வகை கொரோனா பாதித்த இளங்கோவனுக்கு செயற்கை சுவாசம்!!

Photo of author

By Vijay

XBB வகை கொரோனா பாதித்த இளங்கோவனுக்கு செயற்கை சுவாசம்!!

தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவர், முன்னாள் மத்திய அமைச்சர் , தற்போதைய ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினர் இளங்கோவன், சர்ச்சை பேச்சுகளில் மிகவும் பெயர் போனவர். கடந்த 2014 நாடாளுமன்ற தேர்தலில் பாஜக பெற்ற வெற்றியை கடுமையாக விமர்சித்தார். குறிப்பாக பிரதமர் மோடி அன்றைய தமிழக முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்தது பற்றி மிகவும் கடுமையாக விமர்சனம் செய்தவர் இளங்கோவன்.

 

தமிழக காங்கிரஸ் தலைவர்களில் முக்கிய இடம் இவருக்கு உண்டு, காங்கிரஸ் கட்சியில் பல பொறுப்புகளை வகித்தவர். தந்தை பெரியாரின் பேரன் என்ற அடைமொழியுடன் வலம் வரும் இவர், கடந்த சட்டமன்ற தேர்தலில் ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்.

 

ஈரோடு இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற இளங்கோவன் கடந்த 10ம் தேதி சட்டமன்ற உறுப்பினராக பதவி ஏற்றுக்கொண்டார். இந்த நிலையில் திடீரென அவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு, சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவரை பரிசோதித்த மருத்துவர்கள் XBB எனப்படும் உருமாறிய கொரோனா தொற்று ஏற்பட்டு, தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறினர்.

 

தீவிர சிகிச்சை பிரிவில் உள்ள இளங்கோவனுக்கு நேற்று மீண்டும் பரிசோதனை செய்யப்பட்டதில், அவருக்கு மூச்சு விடுவதில் சிரமம் உள்ளதால், செயற்கை ஆக்சிஜன் சுவாச கருவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.மேலும் நுரையீரல் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால், ரத்தத்தில் ஆக்சிஜன் அளவை சமநிலை செய்வதற்கு செயற்கை சுவாசம் கொடுக்கப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் கண்காணிக்கப்பட்டு வருவதாக மருத்துவமனை தகவல்கள் தெரிவிக்கின்றனர்.