மீம்ஸ் கிரியேட்டர்ஸ்க்கு எச்சரிக்கை.. திமுக குறித்து போட்டால் இனி உடனே லாக்கப் தான்!!

0
155
#image_title

மீம்ஸ் கிரியேட்டர்ஸ்க்கு எச்சரிக்கை.. திமுக குறித்து போட்டால் இனி உடனே லாக்கப் தான்!!

திமுக ஆட்சிக்கு வந்தால் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூபாய் ஆயிரம் வழங்குவதாக கூறியிருந்த நிலையில் ஆட்சி அமைத்து ஒன்றரை வருட காலம் ஆகியும் செயல்பாட்டிற்கு வராமலே இருந்தது.

இது குறித்து எதிர்க்கட்சி என தொடங்கி பலரும் சரமாரியாக கேள்வி எழுப்ப தொடங்கினர். தற்பொழுது நிதிநிலை பற்றாக்குறை காரணமாக இந்த திட்டம் செயல்பாட்டிற்கு வருவதற்கு தாமதமாகிறது என்ற பதிலையே அனைத்து அமைச்சர்களும் கூறி வந்த நிலையில் தற்போது நடந்து முடிந்த பட்ஜெட் கூட்டு தொடரில் வரும் செப்டம்பர் மாதம் முதல் குடும்பத் தலைவிளுக்கான உரிமை தொகை வழங்கப்படும் என கூறியுள்ளனர்.

அதிலும் பட்டியல் இடப்பட்ட சில குடும்ப தலைவிகளுக்கு மட்டுமே இந்த பணம் கிடைக்கும் என்றும் மற்றவர்களுக்கு இது வழங்கப்படாது என்று வரையறுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு கூறியதும் எதிர்க்கட்சி இந்தத் திட்டம் குறித்து கண்டனம் தெரிவிக்க ஆரம்பித்தது.

மேலும் இது குறித்து பல மீமஸ்களும் இணையதளத்தில் வந்த வண்ணமாக தான் உள்ளது. அவ்வாறு போடப்பட்டதில் வாய்ஸ் ஆப் சவுக்கு சங்கர் என்ற ட்விட்டர் பக்கத்தில் இதனை கிண்டல் செய்யும் விதமாக நகைச்சுவை வடிவில் ஸ்டாலின் மற்றும் பி டி ஆர் குறித்து மீம்ஸ் போட்டு உள்ளார். இந்த மீம்ஸ் ஆனது இணையத்தில் வேகமாக வைரலாகி வந்த நிலையில் இது குறித்து மாநில மகளிர் ஆணையத்தின் தலைவர் புகார் அளித்துள்ளார்.

பெண்களை அவதூறு படுத்தும் வகையில் இந்த வீடியோ இருப்பதாகவும் மேலும் முதல்வர் என தொடங்கி தமிழக அரசையே இழிவுபடுத்தும் வகையில் இருப்பதால் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சைபர் கிரைம்-யிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

அதன் அடிப்படையில் சைபர் கிரைம் துறையினர் அந்த ட்விட்டர் பக்கத்தின் உரிமையாளர் பிரதீப் என்பவர் மீது மூன்று வழக்குகளின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ளனர்.

இவ்வாறு அரசாங்கத்தின் திட்டங்கள் மற்றும் அதில் இருக்கும் நூதன கொள்ளைகளை குறித்து பல மீம்ஸ்கள் தற்போது வரை வெளிவந்த வண்ணமாக தான் உள்ளது.

அந்த வகையில் பார்க்கையில் அனைவர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட வேண்டும். இவ்வாறு இவர் போட்ட மீம்ஸ் அதிக அளவு முதல்வர் மற்றும் பி டி ஆர்-ஐ கிண்டல் செய்யும் விதத்தில் இருப்பதால் ஆளும் கட்சியானது ஒருதலையாகவே செயல்பட்டுள்ளது என்பது தெரியவந்துள்ளது.