திமுகவை மண்ணை கவ்வ வைக்க அதிமுக போட்ட பக்கா ப்ளான்! அதிர்ச்சியில் ஸ்டாலின்!

Photo of author

By Sakthi

அதிமுக மற்றும் திமுக கூட்டணி தமிழகத்தில் வலுவாக இருந்து வருகிறது. இந்த நிலையில், அதிமுகவிலிருந்து விலகி வந்து சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமாரும் திமுகவில் இருந்து விலகி வந்து இந்திய ஜனநாயகக் கட்சி தலைவர் பச்சமுத்து அவர்களும் தனி கூட்டணி அமைத்தார்கள். இந்த இரண்டு கட்சிகளையும் சேர்த்து மூன்றாவது அணி அமைப்பதற்கான முயற்சி முன்னெடுத்து வந்தார்கள் ஆகவே மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவர் கமல்ஹாசனை நேரில் சந்தித்து கூட்டணிக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

அதுமட்டுமல்லாமல் எங்களுடைய கருத்திற்கு ஒத்துப்போகும் யாராக இருந்தாலும் எங்களுடைய கூட்டணிக்கு வரலாம் என்று அழைப்பு விடுக்கப்பட்டது. அதனை அடுத்து தூத்துக்குடி மாவட்டத்தில் நடந்த ஒரு பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார் மக்கள் நீதி மையம் கட்சியுடன் கூட்டணி உறுதி செய்யப்பட்டு இருப்பதாகவும், முதலமைச்சர் வேட்பாளர் கமல்ஹாசன்தான் என்றும் தெரிவித்திருக்கிறார்.

இதனை தொடர்ந்து அவர்களுக்குள் பேச்சுவார்த்தை நடந்தது இந்தப் பேச்சுவார்த்தையின் முடிவில் மக்கள் நீதி மய்யம், சமத்துவ மக்கள் கட்சி ,இந்திய ஜனநாயக கட்சி, ஆகிய கட்சிகளுக்கு இடையே தொகுதி பங்கீடு உறுதியாக இருப்பதாக தகவல்கள் கிடைத்து இருக்கின்றன. இந்த தொகுதி பங்கீட்டின் படி மக்கள் நீதி மையம் 154 தொகுதிகளில் போட்டியிடுகிறது. அதேபோல சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சி 40 தொகுதிகளில் போட்டியிட இருக்கிறது . மேலும் இந்திய ஜனநாயக கட்சி 40 தொகுதிகளில் போட்டியிட இருக்கிறது.

சரத்குமார் மற்றும் பச்சமுத்து தவிர்த்து தற்போது உருவாகியிருக்கும் அந்த கூட்டணியில் கமலஹாசனுக்கு தமிழகம் முழுவதிலும் கணிசமான அளவிற்கு வரவேற்பு இருக்கிறது என்று சொல்லப்படுகிறது. அதோடு அவர் செல்லும் இடமெல்லாம் கூட்டம் சேர ஆரம்பித்து இருக்கிறது. ஆகவே தான் அந்த கூட்டணியில் முதலமைச்சர் வேட்பாளராக கமல்ஹாசன் நிறுத்தப்பட்டு இருக்கிறார் என்று சொல்லப்படுகிறது.

அதோடு மட்டுமல்லாமல் தற்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி செய்துவரும் அனைத்து விதமான திட்டங்களையும் அவர் செய்யும் தவறுகளையும் விமர்சிக்கும் தைரியம் அந்த கூட்டணியில் கமல்ஹாசனுக்கு தான் இருக்கிறது என்று தெரிவிக்கப்படுகிறது. இப்படி துணிச்சலான ஒருவரை முதலமைச்சர் வேட்பாளராக நிறுத்தியது மகிழ்ச்சி அளிப்பதாக அந்தக் கூட்டணியின் சார்பாக தெரிவிக்கப்படுகிறது என சொல்லப்படுகிறது.

ஆரம்பத்தில் சென்னை மயிலாப்பூர் தொகுதியில் கமல்ஹாசன் போட்டியிடவுள்ளார் என்று தகவல் கிடைத்திருந்தது. ஆனால் தற்சமயம் அவர் வேறு தொகுதியில் போட்டியிட இருப்பதாக தெரியவந்திருக்கிறது.ஏனென்றால் சென்னையை பொருத்தவரையில் என்னதான் கமல்ஹாசனுக்கு கூட்டம் கூடினாலும் அங்கேயே அதிமுக மற்றும் திமுகவை தவிர்த்து பெரிய அளவில் எந்த கட்சியாலும் வாக்குகளை பெற முடியாது என்பதை கமல்ஹாசன் உணர்ந்து கொண்டதாகவும், அதற்காகவே வேறு வழியை தேர்ந்தெடுத்து இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இருந்தாலும் சென்ற 2016 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் விஜயகாந்த் தலைமையில் உருவான மக்கள் நல கூட்டணி போலவே தற்சமயம் கமலஹாசன் தலைமையில் புதிதாக ஒரு கூட்டணி உருவாகி இருக்கிறது இது எந்த மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்று இருக்கிறது என்பது தெரியவில்லை ஆனால் 2016ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் அதிமுக ஒரு மாபெரும் சரித்திர வெற்றியை பெற்றதற்கு இந்த மக்கள் நல கூட்டணியின் ஒரு காரணம் என்று சொல்லலாம்.அந்தவகையில், பார்த்தோமானால் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியின் தூண்டுதலின் பெயரிலேயே கமல்ஹாசன் தலைமையில் இந்த கூட்டணி உருவாகி இருக்கிறதா என்ற சந்தேகமும் எழுந்திருக்கிறது.

திமுகவின் அதிருப்தி வாக்குகள் தானாகவே அதிமுக கூட்டணிக்கு வந்து சேர்ந்துவிடும் அதேசமயம் நடுநிலையாளர்கள் என்ற ஒரு வாக்கு வங்கி இருக்கிறது. அந்த வாக்கு வங்கி ஆனது திமுகவிற்கு சென்று விடக்கூடாது என்ற காரணத்திற்காகவே இந்த கூட்டணி முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியின் தூண்டுதலின் பெயரில் தான் உருவாக்கப்பட்டிருக்கிறது என்ற ஒரு கருத்தும் உலாவருகிறது.இதனை அறிந்து கொண்ட திமுக தலைமை அதிர்ந்து போய் இருப்பதாக சொல்கிறார்கள்.