பிரதமர் வெளிநாட்டு பயணம்! விவசாயிகள் கொந்தளிப்பு!

0
63
prime-minister-travels-abroad-farmers-turmoil
prime-minister-travels-abroad-farmers-turmoil

பிரதமர் வெளிநாட்டு பயணம்! விவசாயிகள் கொந்தளிப்பு!

டெல்லியில் விவசாயிகள் மூன்று வேளாண் திட்டத்தை ரத்து செய்யக் கோரி போராடி வருகின்றனர்.இந்நிலையில் பிரதமர் வங்காள தேசத்தின் சுதந்திர தின விழாவை சிறப்பிக்க வெளிநாடு பயணம் மேற்கொள்கிறார்.இவரின் வெளிநாட்டு பயணமானது கொரோனா காரணத்தினால் வெளியே செல்வதை தவிர்திருந்தார்.இப்பொழுது கொரோனா பாதிப்பானது கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் நிலையில் மீண்டும் தனது வெளிநாட்டு பயணத்தை ஆரம்பித்துள்ளார்.

தனது சொந்த நாடான இந்தியாவில் விவசாயிகள் போராடிக் கொண்டிருக்கும் நிலையில் அவர்களுக்கு பேச்சுறை கொடுக்காமல் வெளிநாட்டிற்கு சென்று அம்மகளிடம் நாட்டுநடப்பு பற்றி என்ன பேசப்போகிறார் என பலர் மத்தியிலும் கேள்விகள் எழுந்துள்ளன.இவரின் இந்த செயலால் விவசாயிகள் மற்றும் பொது மக்கள் பெருமளவு கோவமடைந்துள்ளனர்.அந்த வகையில் 2014 ஆம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி பதவி ஏற்றார்.

அப்போதிலிருந்தே இவருக்கு வெளிநாடுகளின் மீது நாட்டம் ஏற்பட்டு விட்டது போல,மொத்தமாக 96 நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.அதில் 2014 ஆம் ஆண்டு 9 நாடுகளுக்கு பயணம் மேற்கொண்ட மோடி 2015 ஆம் ஆண்டு 23 நாடுகளுக்கும் அதனையடுத்து 2016 ஆம் ஆண்டு 17 நாடுகளுக்கும் பயணம் மேற்கொண்டுள்ளார்.கடந்த ஆண்டிடுகளில் மட்டும்,2017 ஆம் ஆண்டு தொடக்கத்திலேயே 14 வெளிநாட்டு பயணங்களை மேற்கொண்டார்.2019 ஆம் ஆண்டு 15 வெளிநாட்டு பயணங்களை மேற்கொண்டுள்ளார்.

இதில் 1 முறை 35 நாடுகளுக்கும், 2 முறை 15 நாடுகளுக்கும், 3 முறை 2 நாடுகளுக்கும், 4 முறை 4 நாடுகளுக்கும், 5 முறை 3 நாடுகளுக்கும் சென்றுள்ளார்.2020 ஆம் ஆண்டு கொரோனா ஆண்டாக இருந்ததால் விமான போக்கு வரத்திற்கு தடை விதித்திருந்தது.அதனால் மோடிக்கு அந்த ஆண்டு வெளிநாடு செல்லா ஆண்டாக இருந்தது.இந்நிலையில் கிழக்கு பாகிஸ்தான் பிரிந்து வங்காள தேசமாக உருவாகியது.இது தனி தேசமாக பிரிய இந்தியா முக்கிய பங்கை வகிக்கிறது.

அதனால் 50வது ஆண்டு விழா வங்க தேசத்தில் கொண்டாடயிருக்கிறது.இந்த விழாவை பிரதமர் மோடி வந்து சிறப்பிக்குமாறு அந்த நாடு அழைப்பு கொடுத்துள்ளது.நரேந்திர மோடிக்கு 2021 ஆண்டின் முதல் வெளிநாட்டு பயணமாக இது அமைகிறது.அவர் உள்நாட்டு பிரச்சினைகளை காணாமல் வெளிநாட்டை சுற்ற ஆரம்பித்து விட்டார் என மக்கள் வசைப்போடுகின்றனர்.