சட்டமன்ற தேர்தலுக்காக அரசியல் கட்சிகள் செய்த செலவு இத்தனை கோடியா-தேர்தல் ஆணையம் வெளியீடு.!!

Photo of author

By Vijay

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நடந்த சட்டமன்ற தேர்தலில் திமுக ரூ.114 கோடியும் அதிமுக ரூ.57.5 கோடியும் செலவு செய்துள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

தமிழகம், புதுச்சேரி, மேற்கு வங்கம் மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலுக்கு அரசியல் கட்சிகள் செய்த செலவு விவரங்களை இந்திய தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பித்தனர்.

இதில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலுக்காக திமுக ரூ.114.11 கோடியும், அதிமுக ரூ.57.5 கோடியும் செலவு செய்துள்ளனர். மேலும், பாமக 30 லட்சம் செலவு செய்துள்ளனர்.

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தலில் திருணாமூல் காங்கிரஸ் கட்சி ரூ.154.28 கோடியும், காங்கிரஸ் கட்சி ரூ.84.93 கோடியும் செலவு செய்துள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதுவரையில் பாஜக செலவு செய்த விவரத்தை இன்னும் வெளியிடவில்லை.