தமிழக அரசு வேளாண்மையில் பயிர் உற்பத்தியை அதிகரிக்க சாதாரண நீர் மோட்டார்களுக்கு பதிலாக விவசாயிகளுக்கு மின்மோட்டார் வழங்குவதில் மானியம் வழங்க முடிவெடுத்து அதற்கான திட்டமும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
புதிய நான்கு நட்சத்திர மின் மோட்டார் களை விவசாயிகள் பெற்று நிலத்தடி நீரின் மூலம் விவசாயத்தை அதிகரிக்க தமிழக அரசு 15 ஆயிரம் ரூபாய் அல்லது விவசாயிகளை நேரடியாக வாங்கக்கூடிய மின் போட்டார்கள் விலையில் 50 சதவிகிதம் மானியமாக வழங்கி வருகிறது.
இந்த திட்டத்தில் பயன்பெற நினைக்கும் விவசாயிகள் தங்களுடைய பழைய மோட்டார் களுக்கு பதிலாக புதிய நான்கு நட்சத்திர மின் மோட்டாரை அரசினுடைய மானியத்துடன் பெற்று பயன்பெற வேண்டும் என சேலம் மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி அவர்கள் சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு அழைப்பு விடுத்திருக்கிறார்.
மேலும் புதிதாக விவசாயிகள் கிணறு வெட்டி இருந்தாலும் அல்லது இதுவரை மின்மோட்டார்கள் பயன்படுத்தவில்லை என புதிய மின் மோட்டார்களை வாங்க நினைத்தாலும் இந்த திட்டத்தின் கீழ் பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இந்த திட்டம் குறித்த மேலும் தகவல்களை அறிந்து கொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு சென்று பயன்படலாம் என தெரிவித்திருக்கிறார்.
முகவரி :-
சேலம் மாவட்ட செயற்பொறியாளா் அலுவலகம். குமாரசாமிப்பட்டி, சேலம்- 7.
வருவாய் கோட்ட அளவில் உள்ள உதவி செயற்பொறியாளா், குமாரசாமிப்பட்டி, சேலம் – 7,