பெண் மீது மின்கம்பம் விழுந்து! பரிதாபமாக உயிரிழப்பு! 

0
225

பெண் மீது மின்கம்பம் விழுந்து! பரிதாபமாக உயிரிழப்பு! 

பெருமாட்டுநல்லுார் ஊராட்சி துலுக்காத்தம்மன் கோவில் தெருவில் வசிப்பவர் உலகநாதன். இவருக்கு வயது 40. இவர் தனியார் நிறுவன காவலாளியாக பணிபுரிகிறார். இவரது மனைவி அபிராமி 35. இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளன.

நேற்று முன்தினம் இவரது வீட்டு அருகில் உள்ள காலி மனையில் உரிமையாளர் சுத்தம் செய்து கொண்டிருந்தனர். வீட்டு வேலையை முடித்து விட்டு பொழுது கழிக்க வீட்டு வாசலில் நின்று கொண்டிருந்தாள். அங்கு செய்து கொண்டு இருக்கும் பணியை அபிராமி வேடிக்கை பார்த்தாள். அங்கு ஜே. சி. பி. இயந்திரம் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தது.

ஜே. சி. பி. தென்னை மரத்தை ஒன்றை சாய்த்தபோது அருகில் சென்ற மின்கம்பிகளில் மீது விழுந்தது. தென்னை பளு தாங்காமல் அடுத்தடுத்த இரு மின்கம்பங்கள் விழுந்தன. ஒரு கம்பம் காலி மனையிலும், மற்றொரு மின்கம்பம் வீட்டு வாசலில் நின்று வேடிக்கை பார்த்த அபிராமியின் தலையிலும் விழுந்தது. மின் கம்பம் தலையில் விழுந்த வேகத்தில், சம்பவ இடத்திலேயே அபிராமி பலியானார்.

கூடுவாஞ்சேரி காவல் ஆய்வாளர் கீதா சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அபிராமி உடலை மீட்டனர். பின்னர் செங்கல்பட்டியில் அருகில் உள்ள  மருத்துவமனைக்கு அனுப்பினார். மேலும், மின்கம்பம் சாய்ந்ததால், அப்பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

புகார் தொடர்ந்து பின்னர் சம்பவ இடத்திற்கு கூடுவாஞ்சேரி மின்வாரிய உதவி செயற்பொறியாளர் நாகராஜன் நேரில் வந்து ஆய்வு செய்தார். ஜே. சி. பி.  இயந்திர ஓட்டுனர் மற்றும் அதன் உரிமையாளர் மீது, கூடுவாஞ்சேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். உரிமையாளரை பிடித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

Previous articleகன்னியாகுமரியில் அரசு பேருந்து மோதி டிரைவர் பலி! பரபரப்பில் அப்பகுதி!
Next articleகார்த்தி படத்தில் இருந்து திடீரென்று விலகிய விஜய் சேதுபதி… பின்னணி என்ன?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here