ஆதார் எண்ணை இணைத்தால் மட்டுமே மின் கட்டணத்தை செலுத்த முடியும் – புதிய தகவல் 

Photo of author

By CineDesk

ஆதார் எண்ணை இணைத்தால் மட்டுமே மின் கட்டணத்தை செலுத்த முடியும் – புதிய தகவல்

தமிழகத்தில் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

ஆதார் அட்டை என்பது பல துறைகளிலும் நாம் அவசியம் பயன்படுத்தக்கூடிய அடையாள அட்டையாக மாறிவிட்டது. வங்கிக் கணக்கு, வாக்காளர் அடையாள அட்டை, ரேஷன் கார்டு எனப் பலவற்றுடன் இணைக்கப்பட்டுள்ள ஆதார் அடையாள அட்டையை தற்போது மின் இணைப்பு எண்ணுடன் இணைக்க வேண்டும் என்று அரசு குறிப்பிட்டுள்ளது.

மாநிலம் முழுவதும் 2 கோடியே 30 லட்சம் வீட்டு மின் இணைப்புகளும்,22 லட்சம் விவசாய மின் இணைப்புகளும், 11 லட்சம் குடிசை மின் இணைப்புகளும் பயன்பாட்டில் உள்ளது.

இந்நிலையில் மின் இணைப்புகளை ஆதார் எண்ணை இணைத்தால் மட்டுமே மின் கட்டணத்தை செலுத்த முடியும் என்ற தகவல் பொதுமக்களின் தொலைபேசி எண்ணுக்கு தகவல் அனுப்பப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து கிராம புற மற்றும் நகர்ப்புற பகுதியில் உள்ள மக்கள் ஆதார் எண் இணைக்க இன்டர்நெட் மையங்களை தேடிச் சென்று இணைத்து வருகிறார்கள்.ஆதார் எண்ணை இணைப்பதால் 100 யூனிட் இலவச மின்சாரத்திற்கு எந்த பாதிப்பும் இருக்காது என்று மின்சார வாரியம் நுகர்வோர்களுக்கு கூறப்பட்டுள்ளது.

மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணியை இணைய தளம் மூலமாக மிகவும் எளிதாக செய்து முடித்து விட முடிகிறது.