மின் வாரிய ஊழியர்களே உஷார்! மக்களிடம் இதனை கேட்டால் உடனடி நடவடிக்கை தான்!
கடந்த அக்டோபர் மாதம் ஆறாம் தேதி அன்று மின் வாரியம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.அந்த அறிவிப்பில் 100 யூனிட் மானியம் பெறும் பயன்பாட்டாளர்கள் அனைவருமே கட்டாயமாக மின் இணைப்புடன் ஆதார் எண்னை இணைக்க வேண்டும் என கூறப்பட்டிருந்தது.
அந்த வகையில் தற்போது தமிழகம் முழுவதும் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகின்றது.இந்நிலையில் கடந்த வாரம் மின் வாரியம் வெளியிட்ட சுற்றறிக்கையில் அனைவரும் நிச்சயம் ஆதார் எண்னை மின் இணைப்புடன் இணைத்திருக்க வேண்டும் என மீண்டும் ஒரு முறை அறிவுறுத்தப்பட்டது.
மேலும் இதற்கு நாம் நம்முடைய செல்போன் மூலமாகவும் ,கணினி மையங்களிலும் அல்லது மின் வாரிய அலுவலகத்திலும் சென்று இணைத்து கொள்ளலாம்.அதனை தொடர்ந்து தமிழ்நாடு மின்வாரிய மூலம் செயல்பட்டு வரும் 2811 மின் அலுவலங்களில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டது.
இந்த சிறப்பு முகாம்கள் டிசம்பர் 31 ஆம் தேதி வரை செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் நேற்று ராயப்பேட்டையில் நடந்த சிறப்பு முகாமை மின்துறை அமைச்சர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார.
அப்போது அவர் கூறுகையில் ஆதார் எண்னை இணைக்க வருபவர்களுக்கு பொதிய அளவு இருக்கை வசதி ஏற்பாடு செய்திருக்க வேண்டும்.மேலும் முதியவர்கள் ,மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும்.
இதனை தொடர்ந்து மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கு பொதுமக்களிடம் இருந்து எந்த தொகையும் வசூல் செய்ய கூடாது.குறிப்பாக லஞ்சம் கேட்பதாக யாரேனும் புகார் அளித்தால் உரியவர் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.