மின்சாரதுறை அமைச்சர் கைது!! சட்ட ஆலோசகர்களிடம் முதல்வர் திரு.மு.க.ஸ்டாலின்  ஆலோசனை!!

Photo of author

By Parthipan K

மின்சாரதுறை அமைச்சர் கைது!! சட்ட ஆலோசகர்களிடம் முதல்வர் திரு.மு.க.ஸ்டாலின்  ஆலோசனை!!

இன்று அதிகாலையில் தமிழக மின்சார துறை அமைச்சர் திரு. செந்தில் பாலாஜி அவர்களை அமலாக்க துறை அதிகாரிகள் அவரது சென்னை  பசுமை வழிசாலை வீட்டில் வைத்து கைது செய்தனர் என்று அதகாரிகள்  தெரிவித்து உள்ளன.

அமைச்சர்  செந்தில் பாலாஜியின் தலைமை செயலக அறை, அரசு இல்லம், அவரின் சொந்த ஊரான கரூர்யில் உள்ள வீடு மற்றும் அவரின் அண்ணன் வீடு ஆகிய இடத்தில அமலாக்க துறையினர் நேற்றைய தினம் முதல் சோதனையில் ஈடுபட்டனர். சுமார் 18 மணி நேரம் சோதனை நடைபெற்றது.

இதனையடுத்து அமைச்சர் செந்தில் பாலாஜி அவரது சென்னை  பசுமைவழிச்சாலை இல்லத்தில்  வைத்து அமலாக துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். அப்பொழுது அவருக்கு பயங்கர நெஞ்சுவலி ஏற்பட்டதால் தாங்க முடியாமல் அழுது துடிதுடித்தார். இதனால்  அதிகாரிகள் அவரை அவசர அவசரமாக ஓமந்தூரார் பின்னோக்கு மருத்துவமனையில் உடனடியாக சேர்த்தனர்.

இதனையடுத்து தமிழக முதல்வர் பாஜகவின் அமலாக்கத்துறை மனித நேயம்மற்ற முறையில் நடந்து கொண்டதாகவும்.  இதனை நாங்கள் சட்டரீதியாக எதிர்கொள்வோம் என்றும் மேலும் திமுக சட்ட வல்லுனர்களை கொண்ட குழு  ஆலோசனை நடைபெற்று வருகிறது.  இந்த குழுவில் தமிழக விளையாட்டு துறை அமைச்சர் திரு.உதயநிதி மற்றும் என்.ஆர்.இளங்கோவன் அடங்கியோர் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதனை தொடர்ந்து திக பொதுசெயலாளர் கீ.வீரமணி அவர்கள் திரு.செந்தில் பாலாஜி அவர்கள் நலம் பெற்று வருவதாக செய்தியாளர் சந்திப்பில் கூறினார்.