மின்கட்டண உயர்வு இன்று முதல் அமல்! அதிர்ச்சியில் மக்கள்!

0
129
Electricity tariff increase effective from today! People in shock!
Electricity tariff increase effective from today! People in shock!

மின்கட்டண உயர்வு இன்று முதல் அமல்! அதிர்ச்சியில் மக்கள்!

தமிழகத்தில் மின் கட்டணத்தில் மாற்றங்கள் செய்யப்படுவதாக அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவித்தார். அந்த அறிவிப்பின் படி அனைத்து வீட்டு மின்நுகர்வோர்களுக்கும் நூறு யூனிட் வரை விலையில்லா மின்சாரம் தொடர்ந்து வழங்கப்படும் என கூறினார். மேலும் இரண்டு மாதங்களுக்கு மொத்தம் 200 யூனிட் வரை பயன்படுத்தும் 63 லட்ச்சத்து 35 ஆயிரம் வீட்டு மின்நுகர்வோர்களுக்கு(26.73 சதவீதம் ) மாதம் ஒன்றுக்கு ரூ 27 லட்ச்சத்து 50 ஆயிரம் 300 யூனிட்டுகள் வரை மின்நுகர்வு செய்யும் 36.25 லட்சம் வீட்டு மின்நுகர்வோர்களுக்கு (15.30 சதவீதம்) மாதம் ஒன்றுக்கு ரூ 72.50ம் , 400 யூனிட்டுகள் வரை மின் நுகர்வு செய்யும் 18.82 லட்சம் வீட்டு மின் நுகர்வோர்களுக்கு (7.94 சதவீதம் ) மாதம் ஒன்றுக்கு ரூ .147.50-ம், 500 யூனிட்டுகள்  வரை மின் நுகர்வு செய்யும் 10.56 லட்சம் வீட்டு மின் நுகர்வோர்களுக்கு (4.46 சதவீதம்) மாதம் ஒன்றுக்கு ரூ 297.50-ம், 600 யூனிட்டுகள் வரை மின் நுகர்வு செய்யும் 3.14 லட்சம் வீட்டு மின்நுகர்வோர்களுக்கு (1.32 சதவீதம்) ரூ 155 ம் மட்டுமே கட்டணத்தை உயர்த்த முடிவு செய்யப்பட்டதாவும் கூறினார்கள்.

இதனை தொடர்ந்து  பொதுமக்களிடம் கருத்துக்கள் கேட்கப்பட்டது. இந்நிலையில் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த புதிய மின்கட்டண உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது என தமிழ்நாடு மின்சரா வாரியம் தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்பானது மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Previous articleநான் தெளிவாத்தான் இருக்கேன்! பத்திரிகையாளர்களிடம் அதிரடியாக தெரிவித்த ராகுல் காந்தி!
Next articleதிமுகவின் முக்கிய அமைச்சருக்கு கொரோனா தொற்று! அதிர்ச்சியில் முதலமைச்சர்!