“மின் திருட்டு” ஒரே கிளிக் தான் செல்போனே காட்டி கொடுத்து விடும்!! மின்சாரவரியத்தின் அதிரடி நடவடிக்கை!!
தமிழக மின்வாரியமானது சமீபகாலமாக நுகர்வோர்களுக்கு ஏற்றவாறு புதிய அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது.அந்த வகையில் சில மாதங்களுக்கு முன்பு நிர்வாகிகள் அனைவருக்கும் புதிய விதிமுறைகளை அமல்படுத்தியது.குறிப்பாக நுகர்வோர்கள் மின் இணைப்பு கேட்டு விண்ணப்பித்த ஏழு நாட்களுக்குள் அதனை முடித்து விட வேண்டும் இல்லையென்றால் அவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று திட்டவட்டமாக தெரிவித்தது.இதனையொட்டி ஓர் புதிய செயலியையும் அறிமுகம் செய்தது.
அந்த செயலி மூலம் நுகர்வோர்கள் தங்களது மின் இணைப்பு குறித்த தகவல்கள் மின் இணைப்பு ரத்து செய்வது பெயர் மாற்றம் என அனைத்தையும் ஒரே தளத்தில் செய்து கொள்ளலாம்.நுகர்வோருக்கு இது மிகவும் பயன்படும் வகையில் எளிமையாக வடிவமைக்கவும் பட்டது.இந்த சூழலில் தற்பொழுது தமிழக மின்வாரிமானது மீண்டும் புதிய அறிவிப்பு போன்ற வெளியிட்டுள்ளது.அதன்படி தங்களது பகுதியில் யாரேனும் அரசாங்க விதிமுறைகளை மீறி மின் இணைப்பு எடுத்திருந்தால் அவர்களைப் பற்றி புகார் அளிக்கலாம் என்று கூறியுள்ளனர்.
இதற்கென்று சிசிஎம்எஸ் என்ற செயலியையும் அறிமுகப்படுத்தியுள்ளனர். மேற்கொண்டு இந்த புகார் அளிப்பதன் மூலம் உங்களது முகவரி மற்றும் உங்களது விவரங்கள் எதுவும் தெரியப்படாது என்றும் கூறியுள்ளனர்.மேலும் இந்த இணையத்தை ஆண்ட்ராய்டு மட்டும் ஐஓஎஸ் ஆகியவற்றில் உபயோகிக்கும் படி வடிவமைக்கப்பட்டுள்ளது.மின் திருட்டு குறித்த தகவல்களை தெரிவிக்க இந்த இணையத்தில் சென்று, நீங்கள் எது குறித்து புகார் அளிக்க விரும்புகிறீர்கள் என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
இதனையடுத்து மின் திருட்டு குறித்து திப்ட் ஆப் எனர்ஜி என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
பின்பு மின் திருட்டு நடக்கும் இடம் போன்ற தகவல்களை கொடுத்தால் இது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும்.