தென்னை தோப்பை நாசம் செய்த யானைகள்?

Photo of author

By CineDesk

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் 10 வனச்சரகங்கள் உள்ளன. இந்த வனச்சரகத்தில் யானை, புலி, சிறுத்தை, மான், கரடி, செந்நாய் போன்ற வனவிலங்குகள் வசித்து வருகின்றன. வனவிலங்குகள் உணவு தண்ணீர் தேடி விவசாய தோட்டத்தில் புகுந்து பயிர்களை நாசம் செய்வது வழக்கமான தொடர்கதையாகி வருகிறது.

இந்நிலையில் தாளவாடி வனச்ச கரகத்திக்கு உட்பட்ட மல்குத்திபுரம் கிராத்தை சேர்ந்தவர் விவசாயி சக்திவேல். இவர் தனது தோட்டத்தில் தென்னை மரங்களை சாகுபடி செய்துவந்துள்ளார். நேற்று இரவு அருகில் உள்ள வனப்பகுதியில் இருந்து வந்த காட்டு யானைகள் இவரது தென்னை மரங்களை சேதப்படுத்தியுள்ளது . காலையில் விவசாயி சக்திவேல் தனது தோட்டத்திக்கு சென்று பார்த்தபோது தனது தென்னை மரங்கள் சேதம் அடைந்து இருப்பதை கண்டு கடும் அதிர்ச்சி அடைந்தார்.

வனப்பகுதியில் இருந்து வந்த யானைகள் இரவு நேரத்தில் தனது தென்னை மரங்களை நாசம் செய்துள்ளது அவருக்கு தெரியவந்தது. சுமார் 15 தென்னை மரங்களை யானைகள் சேதப்படுத்தியிருக்கும் என தெரியவந்துள்ளது. யானை சேதப்படுத்திய தென்னைமரங்களுக்கு அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயி கோரிக்கை விடுத்துள்ளார்.