இந்தியாவில் கால் பதிக்கும் எலான் மஸ்கின் ஸ்டார்லிங்க் நிறுவனம்!! இனி இன்டர்நெட்டுக்கு குறையவே கிடையாது!!

Photo of author

By Gayathri

எலான் மஸ்கினுடைய ஸ்டார்லிங்க் நிறுவனத்தின் மூலம் இந்தியாவிற்கு இனி வரும் காலங்களில் செயற்கைக்கோள்கள் மூலம் இணைய சேவை வழங்கப்படும் என்பது உறுதியாகி உள்ளது.

மத்திய அரசினுடைய டேட்டா விதிகள் மற்றும் பாதுகாப்பு தேவைகளுக்கான விதிகளை எலான் மிஸ் அவர்கள் ஏற்றுக் கொண்டதாக கூறப்படுகிறது. ஆனால் இது தொடர்பான எந்தவித ஆவணங்களும் சமர்ப்பிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. வெறும் வாய் வார்த்தையாக மட்டுமே எலான் மஸ்க் அவர்கள் ஏற்றுக்கொண்டதாகவும் தெரிகிறது.

அதன்படி, ஸ்டார்லிங்க் நிறுவனம் GMPCS உரிமம் என்றும் அழைக்கப்படும் செயற்கைக்கோள் பிராட்பேண்ட் சேவை உரிமத்தை பெறுவதற்கான முக்கிய வழிகாட்டுதல்களைக் கடைப்பிடிக்க ஒப்புக்கொண்டது.

முதலில் ஸ்டார்லிங்க் பற்றி தெரிந்து கொள்வோம் :-

பொதுவாக இணையம் இப்போது கடலுக்கு அடியில் உள்ள கேபிள்கள் வழியாகவே வழங்கப்படுகின்றன. ஃபைபர் எனப்படும் கண்ணாடி இழைகள் மூலம் இந்த இணையம் கடத்தப்படுகிறது. இந்த இணைய அலைக்கற்றையை ஏலம் எடுக்கும் நிறுவனங்கள் அதை தங்கள் பிராட்பேண்ட் மூலமாகவும், டவர்கள் மூலமாகவும் வீடுகளுக்கு இணையமாக வழங்குகின்றன.

இதனை மாற்றி அமைக்கும் வகையில், ஸ்டார்லிங்க் நிறுவனமானது செயற்கை கோள்கள் மூலம் நேரடியாக உலகின் எந்த மூலைக்கும் அந்நாட்டு அரசு உத்தரவு வழங்கினால் இணைய சேவையை வழங்க முடியும் என தெரிவித்து இருக்கிறது.

இந்த திட்டத்திற்கு Starlink internet satellites என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இதற்காக இதுவரை 14600 சாட்டிலைட்டுகள் விண்வெளியில் ஏவப்பட்டு அவை வலம் வந்து கொண்டு இருக்கின்றன. இவைதான் பூமியில் ஸ்டார்லிங்க் ரவுட்டர்களை பயன்படுத்துபவர்களுக்கு இணையத்தை வழங்குகின்றது.

400 செயற்கைகோள்கள் மூலம் அடிப்படை இணைய சேவையும், 800 செயற்கைக்கோள்கள் மூலம் வேகமான இணைய சேவையையும் ஸ்பேஸ் எக்ஸ் வழங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிவேக இணைய சேவையை வழங்கக்கூடிய ஸ்டார்லிங்க் நிறுவனமானது, இதற்காக அந்த நிறுவனம் வழங்கும் டிஷ், ரவுட்டர், மற்றும் கேபிள் ஆகியவற்றை பயன்படுத்தி வீட்டில் செட் அப் செய்ய வேண்டும். வீட்டில் கேபிளுக்கு டிஷ் செட் ஆப் பாக்ஸ் வைப்பது போலத்தான் இதுவும். சாட்டிலைட் மூலம் இணையத்தை பெற்று இவை டிஷ் வழியாக உங்கள் வீடு ரவுட்டருக்கு சிக்னல் வழங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

வேகத்தைப் பொறுத்தவரை, நீங்கள் தேர்வு செய்யும் திட்டம் மற்றும் உங்கள் இருப்பிடத்தைப் பொறுத்து 25 Mbps முதல் 220 Mbps வரையிலான இணைய வேகத்தை Starlink வழங்குகிறது. இது மற்ற செயற்கைக்கோள் மூலம் பெறப்படும் வேகத்தை விட மிக வேகமானது என்றும் கூறப்பட்டுள்ளது.

இந்தியாவைப் பொறுத்தவரையில் இதற்கான முழுமையான ஒப்பந்தம் ஆவண வடிவில் பெறப்படவில்லை என்பதும், பெற்றவுடன் தான் இதனுடைய விலை நிர்ணயம் என்பது இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.