கடன் தொல்லை.. கண்ணீர் விட்டு எமோஷனலான MGR!! ஷாக்கான பின்னணி வாழ்க்கை!!

Photo of author

By Rupa

கடன் தொல்லை.. கண்ணீர் விட்டு எமோஷனலான MGR!! ஷாக்கான பின்னணி வாழ்க்கை!!

Rupa

emotional MGR in tears

MGR: திரை மற்றும் அரசியலில் புரட்சியை ஏற்படுத்தியவர் எம்ஜிஆர். இவரின்  மூன்றெழுத்த மந்திரமானது மறைந்த பிறகும் தற்பொழுது வரை வாழ்ந்து வருகிறது. ஆரம்ப கட்ட காலத்தில் காங்கிரஸிலிருந்து பின்பு திராவிட முன்னேற்றக் கழகத்திலிருந்து விலகி அகில இந்திய முன்னேற்ற கழகம் என்ற ஒன்றை ஆரம்பித்தார். இதனிடையே சமூகம் சார்ந்த கருத்துக்களை அவ்வபோது திரைப்படங்களில் புகுத்தியும் வந்தார்.

இவை அனைத்தும் இவர் கட்சி ஆரம்பிக்கும் பொழுது மிகவும் பக்கபலமாக இருந்தது.  இவர் கட்சி ஆரம்பித்த காலகட்டத்தில் மிகுந்த கடனுடன் இருந்ததாக தகவல்கள் பரவியுள்ளது. இதனை அறிந்த மூதாட்டி ஒருவர் இவர் மேலிருந்த பற்றின் காரணமாக அவரை பார்க்க வந்துள்ளார். எம்ஜிஆர் அந்த மூதாட்டியிடம், எதற்கு வந்துள்ளீர்கள் என்று கேட்டுள்ளார். அந்த மூதாட்டி, நீங்கள் மிகவும் கடனில் இருப்பதாக கேள்விப்பட்டேன்.

அதனால் தன்னுடைய சேமிப்பை தர வந்துள்ளேன் என தெரிவித்துள்ளார். இதனை கேட்டதும் எம்ஜிஆர் மனம் நெகிழ்ந்து அவரை அப்படியே அரவணைத்துக் கொண்டார். அப்பொழுதே மக்கள் தங்கள் வீட்டு பிள்ளையாக தான் எம்ஜிஆரை பார்த்துள்ளனர் என்பது இதன் மூலம் நன்றாக உணர முடிகிறது. இதுகுறித்து தகவலை பாண்டியன் ஓர் பேட்டியில் தெரிவித்துள்ளார். மேலும் எம்ஜிஆர் பிறந்த நாளான இன்று இந்த வீடியோவானது இணையத்தில் வைரலாகி வருகிறது.