உடலில் மார்பு,அக்குள்,முதுகு,தொடை,கை,கழுத்து உள்ளிட்ட பகுதியில் சிறு கட்டி போன்று கொழுப்பு கட்டிகள் வருகிறது.இந்த கொழுப்பு கட்டியை தொட்டால் அவை வலிக்காது.இந்த கட்டியால் எந்தவித பாதிப்பு ஏற்படாது என்றாலும் அதை குணப்படுத்திக் கொள்வது தான் நமக்கு நல்லது.
கொழுப்பு கட்டியை கரைக்கும் அற்புத வீட்டு வைத்தியம்:
தேவையான பொருட்கள்:-
1)கருஞ்சீரகம் – ஒரு தேக்கரண்டி
2)குழம்பு மஞ்சள் தூள் – 5 கிராம்
3)தண்ணீர் – ஒரு கிளாஸ்
செய்முறை விளக்கம்:-
ஒரு கிளாஸில் தண்ணீர் ஊற்றிக் கொள்ள வேண்டும்.அடுத்து அதில் ஒரு தேக்கரண்டி கருஞ்சீரக விதை போட்டுக் கொள்ள வேண்டும்.
அடுத்து ஐந்து கிராம் அளவிற்கு மஞ்சள் தூள் சேர்த்து இரவு நேரத்தில் ஊறவைக்க வேண்டும்.மறுநாள் இந்த கருஞ்சீரக தண்ணீரை பாத்திரம் ஒன்றிற்கு மாற்றி அடுப்பில் வைத்து குறைவான தீயில் இரண்டு நிமிடங்களுக்கு கொதிக்க வைக்க வேண்டும்.
பிறகு இந்த பானத்தை கிளாஸிற்கு வடிகட்டி பருகி வந்தால் கொழுப்பு கட்டி பாதிப்பு சரியாகிவிடும்.
குறிப்பு:-
இந்த கருஞ்சீரக பானத்தை வெறும் வயிற்றில் மட்டுமே பருக வேண்டும்.அப்பொழுது தான் முழு பலனை அனுபவிக்க முடியும்.
தேவையான பொருட்கள்:-
1)பூண்டு பற்கள் – இரண்டு
2)தண்ணீர் – ஒரு கிளாஸ்
செய்முறை விளக்கம்:-
முதலில் இரண்டு பூண்டு பற்களை தோல் நீக்கிவிட்டு சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.
பிறகு இதை பாத்திரத்தில் போட்டு ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்க வேண்டும்.அதன் பிறகு அடுப்பை அணைத்துவிட்டு பூண்டு தண்ணீரை கிளாஸிற்கு ஊற்றிக் கொள்ள வேண்டும்.
இந்த நீரை பருகிவிட்டு பூண்டு பற்களை மென்று சாப்பிட வேண்டும்.இப்படி செய்து வந்தால் கொழுப்பு கட்டி பிரச்சனை சரியாகும்.
தேவையான பொருட்கள்:-
1)கற்றாழை ஜெல் – ஒரு தேக்கரண்டி
2)மஞ்சள் தூள் – அரை தேக்கரண்டி
செய்முறை விளக்கம்:-
ஒரு சிறிய கிண்ணத்தில் பிரஸ் கற்றாழை ஜெல் ஒரு தேக்கரண்டி அளவு சேர்த்துக் கொள்ள வேண்டும்.
அடுத்து அதில் அரை தேக்கரண்டி மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்து கொள்ள வேண்டும்.பின்னர் இதை அடுப்பில் வைத்து ஒரு நிமிடம் சூடுபடுத்த வேண்டும்.அதன் பிறகு அடுப்பை அணைத்துவிட்டு இந்த ஜெல் இளஞ்சூட்டில் இருக்கும் பொழுது கொழுப்பு கட்டி மீது அப்ளை செய்தால் பலன் கிடைக்கும்.கொழுப்பு கட்டி மீது கல் உப்பு ஒத்தடம் கொடுத்து வந்தால் அவை சீக்கிரம் கரைந்துவிடும்.