அனுபவ உண்மை.. ஷாம்புவை இப்படி தலைக்கு பயன்படுத்தினால் ஒரு முடி கூட கொட்டாது!!

Photo of author

By Rupa

தலை முடியை பராமரிக்க வேண்டியது நம் கடமை.தலையில் அழுக்கு,எண்ணெய் பிசுக்கு அதிகம் இருந்தால் ஷாம்பு பயன்படுத்தி சுத்தப்படுத்துவது வழக்கம்.வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை ஷாம்பு பயன்படுத்தி தலையை சுத்தம் செய்யலாம்.ஆனால் ஷாம்புவை எவ்வாறு கையாள்வது என்பது குறித்து அறிந்திருந்தால் மட்டுமே முடி உதிர்வு,பொடுகு,முடி வெடிப்பு உள்ளிட்ட பிரச்சனைகளை தவிர்க்க முடியும்.

ஒரு சிலர் தலை முடிகளுக்கு நேரடியாகவே ஷாம்பு பயன்படுத்துவார்கள்.இதனால் ஷாம்புவில் உள்ள இராசயனங்கள் தலையில் நேரடியாக இறங்கி பாதிப்பை உண்டாக்கும்.நீங்கள் பயன்படுத்தும் ஷாம்பு எந்த பிராண்டாக இருந்தாலும் சரி நீரில் கலந்து தான் முடிகளுக்கு பயன்படுத்த வேண்டும்.

அதேபோல் தங்கள் தலை முடிக்கு ஏற்ற ஷாம்பு எதுவென்று தெரிந்து கொண்டு பயன்படுத்த வேண்டும்.வறண்ட முடி,பொடுகு,ஆய்லி ஹேர்,சுருள் முடி என்று தலைமுடிக்கு ஏற்ற ஷாம்புகள் விற்கப்படுகிறது.

தலைக்கு ஷாம்பு அப்ளை செய்த பிறகு கைகளால் மென்மையாக மசாஜ் செய்து வெது வெதுப்பான நீரில் குளிக்க வேண்டும்.ஷாம்பு பயன்படுத்துவதற்கு முன்னர் வெதுவெதுப்பான நீரை தலையில் ஊற்றி முடியை அலச வேண்டும்.பிறகு ஷாம்புவை நீரில் கரைத்து தலைக்கு அப்ளை செய்ய வேண்டும்.

தங்கள் தலைமுடிக்கு தேவையான அளவு ஷாம்பு மட்டுமே பயன்படுத்த வேண்டும்.உங்களுக்கு குறைவான முடி இருந்தால் சிறிதளவு ஷாம்பு பயன்படுத்தினால் போதும்.உங்களுக்கு அடர்த்தியான முடி இருந்தால் கால் பாக்கெட் ஷாம்பு போதுமானதாக இருக்கும்.

உச்சந்தலைக்கு ஷாம்பு அப்ளை செய்து குளித்தால் அழுக்கு,எண்ணெய் பிசுக்கு நீங்கி முடி ஆரோக்கியமாக வளரும்.எண்ணெய் பிசுக்கு அதிகம் உள்ள தலை முடிக்கு அதிகமாக ஷாம்பு பயன்படுத்த வேண்டும்.பிறகு தலைமுடியை நன்கு அலச வேண்டும்.தலைமுடியில் ஷாம்புவின் மணம் அதிகம் வீசக் கூடாது.