கூடுதல் விற்பனைக்கு மது பாட்டில்களை விற்ற ஊழியர்கள்!! சம்பவம் தொடர்பான வீடியோ வைரல்!!

0
33
Employees sold bottles of wine for extra sales!! The video of the incident went viral!!
Employees sold bottles of wine for extra sales!! The video of the incident went viral!!

கூடுதல் விற்பனைக்கு மது பாட்டில்களை விற்ற ஊழியர்கள்!! சம்பவம் தொடர்பான வீடியோ வைரல்!!

தமிழ்நாட்டில் தற்பொழுது அமைச்சர் 500 மது கடைகள் மூடப்பட உள்ளதாகவும், மது கடைகளின் மூலம் பணம் சம்பாதிக்கும் நோக்கம் அரசுக்கு இல்லை என்றும் டாஸ்மார்க்கில் சில முறை கேடுகள் நடைபெறுகிறது என்றும் அதனை சரி செய்ய வேண்டும் என்று முதலமைச்சர் உத்தரவிட்டதாகவும் கூறினார்.

அதனை தொடர்ந்து தமிழகத்தில் அரசு மதுபான கடைகளில் ஏராளமான வெளிநாட்டு மதுபானங்கள் விற்கப்பட்டு வருகின்றது.அந்த வகையில் தற்பொழுது விற்பனை செய்யப்படும் வெளிநாட்டு மதுபானங்களின் விலை ரூ.10 யில் இருந்து ரூ. 320  வரை விலையேற்றம் செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தற்பொழுது டாஸ்மாக் கடைகளில் கூடுதலாக பாட்டில்களுக்கு 10 ரூபாய் அதிகம் வாங்குவதாக தகவல் வெளியாகியுள்ளது. அங்கு பணி செய்யும் ஊழியர்கள் கூடுதலாக பணம் வாங்குகிறார்கள் என்றும் அதை எதிர்த்து யாரவது கேள்வி கேட்டால் அப்படிதான் வாங்குவோம் என்று பதில் கூறுவதாக புகார் வருகின்றது.

இந்த நிலையில் மதிவிலக்கு துறை அமைச்சர் முத்துசாமி மது பாட்டில்களை கூடுதல் விலைக்கு விற்றால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று உத்தரவிட்டார்.

இப்படி ஊதரவிட்ட பிறகும் சில ஊழியர்கள் அதனை மதிக்காமல் தொடர்ந்து கூடுதல் விலைக்கு மதுபானங்களை விற்று வருகின்றனர்.

அந்த வகையில் தற்பொழுது திருவாரூர் மாவட்டத்தில் வழக்கம் போல் மதுபானங்களை ஊழியர்கள் கூடுதல் விலைக்கு விற்று வந்துள்ளனர்.இந்த சம்பவத்தை நபர் ஒருவர் தனது மொபைல் போனில் வீடியோ பதிவு செய்துள்ளார்.

இந்த வீடியோ தற்பொழுது வெளியாகி வைரலாகி நெடிசங்களுக்கு இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

author avatar
Parthipan K