IPPB எனப்படும் இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி லிமிடெட் நிறுவனமானது இந்திய அஞ்சல் துறையின் கீழ் செயல்பட்டு வருகிறது. இதில் தற்பொழுது காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.
வேலைவாய்ப்பு குறித்த விவரங்கள் :-
முதுநிலை மேலாளர், மேலாளர் மற்றும் உதவி மேலாளர்களுக்கான தகுதி தேர்வாக இந்த தேர்வு அமைந்திருக்கிறது. இந்த தேர்வில் கலந்து கொள்ள கல்வி தகுதியாக B.E மற்றும் B.Tech பட்டம் அல்லது முதுகலை பட்டம் வாங்கி இருக்க வேண்டியது அவசியம் என குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், முதுநிலை மேலாளர் பதவிக்கு 6 வருடம் வரை பணி முன் அனுபவமும், மேலாளருக்கு 3 வருடம் வரை பணி முன் அனுபவமும், உதவி மேலாளருக்கு 1 வருடம் வரை பணி முன் அனுபவமும் பெற்று இருத்தல் வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இவர்களுக்கான சம்பளம் முறையே, முதுநிலை மேலாளர் பதவிக்கு ரூ.2,25,937 , மேலாளர் பதவிக்கு மாதம் ரூ.1,77,146 மற்றும் உதவி மேலாளர் பணிக்கு தோராயமாக மாதம் ரூ.1,40,398 வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
விண்ணப்பிக்கும் முறை :-
இந்திய அஞ்சல் துறையின் இந்த காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க நினைப்பவர்கள் https://www.ippbonline.com/ என்ற இணையதளத்தின் மூலமாக தங்களுடைய விண்ணப்பங்களை பதிவு செய்து கொள்ளலாம் என்றும் அஞ்சல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கான கட்டணமாக 750 ரூபாய் செலுத்த வேண்டும் என்றும், SC /ST / மாற்று திறனாளிகள் போன்றவர்கள் இந்த காலி பணியிடங்களுக்கான விண்ணப்ப கட்டணமாக 150 ரூபாய் மட்டும் செலுத்தினால் போதும் என்றும் இந்தியா அஞ்சல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
குறிப்பு :-
இந்த காலி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கூடியவர்கள் நேர்காணலின் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. மேலும், ஏதேனும் காரணங்களுக்காக தேவை ஏற்பட்டால் மட்டும் ஆன்லைன் மூலம் தேர்வு மற்றும் குழு கலந்துரையாடல் நிகழும் என்றும் இந்திய அஞ்சல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.