டாடா நிறுவனத்தில் காத்திருக்கும் பெண்களுக்கான வேலை வாய்ப்பு!

Photo of author

By Sakthi

டாடா நிறுவனம் பெண்களுக்கான வேலையையும் மேற்படிப்புக்கான வாய்ப்பையும் வழங்கி வேலைவாய்ப்பு அறிக்கையை வெளியிட்டுள்ளது. இந்த வேலைக்கான முன்பதிவு விவரங்கள் மற்றும் முழு தகவலை கீழே வருமாறு தெரிந்து கொள்ளுங்கள்.

வேலை விவரங்கள்

பணியிடம் – இளநிலை தொழில் நிபுணர்கள்

தகுதி– 18 வயதிலிருந்து 20 வயதிற்கு உட்பட்ட பெண்கள் மட்டும்

படிப்பு – 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே இதற்கு விண்ணப்பம் செய்யலாம்.

தொடக்கநிலை சம்பளம் – மாதாந்திர சம்பளம் 16,557 மற்றும் போனஸ்.

உயரம் மற்றும் எடை– 145 சென்டிமீட்டர் 43 கிலோ குறைந்தபட்சம் 65 கிலோ வரையில் அதிகபட்சம்.

வேலைக்கான பயிற்சி – தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு 12 நாள் தீவிர பயிற்சியில் ஈடுபடுத்தப்படுவர். இந்த அத்தியாவசிய பயிற்சி தொகுப்பை வெற்றிகரமாக முடித்து பயிற்சியாளர்களுக்கு வேலை வாய்ப்பு நியமன கடிதங்கள் வழங்கப்படும்.

மேற்படிப்புக்கான வாய்ப்பு– TEPL நிறுவனத்தின் ஒரு வருட அனுபவத்திற்கு பிறகு இளநிலை தயாரிப்பியல் பட்டப்படிப்பில் சேரும் வாய்ப்பு.

பணியாளர்களுக்கான நலத்திட்டங்கள் – நிரந்தர வேலைவாய்ப்பு, வேறு ஒப்பந்தமோ, பத்திரமோ இல்லை. நம்பிக்கைக்கு தகுந்த மற்றும் பாதுகாப்பான பணி சூழல். தேவையான வசதிகளுடன் கூடிய பாதுகாப்பான தங்கும் இடங்கள், ஒழுங்குமுறை சட்டங்களுக்குட்பட்ட அனைத்து நலத்திட்டங்கள் உள்ளிட்டவை.

கற்றுக் கொள்வதற்கான வியத்தகு சூழல் – விரைந்து மாறிவரும் தொழில் உலகில் பணி புரியும் பொழுது வெவ்வேறு நுணுக்கங்களை கற்றுக்கொண்டு வாழ்க்கையில் முன்னேற வாய்ப்பு, புதுமை மிகு இயந்திரங்களை இயக்கும் வாய்ப்பு, மெய்நிகர் எதார்த்தத்தின் உதவியுடன் சுகந்திரனை மெருகூட்டும் கல்வி தொகுதிகள்.

முன்பதிவு – தமிழகத்தில் பல இடங்களில் வேலைக்காக முன்பதிவு செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இந்த மாதம் 14ஆம் தேதியிலிருந்து அடுத்த மாதம் 2ம் தேதி வரையில் முன்பதிவு நடைபெறவுள்ளது.

நேரம் – குறிப்பிட்ட இடங்களில் ஒதுக்கப்பட்ட நாட்களில் காலை 8 மணி முதல் இரவு 10 மணி வரையில் நடைபெற உள்ளது.

எடுத்துச் செல்ல வேண்டியவை – பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், ஆதார் அட்டை உள்ளிட்டவற்றின் நகல் மற்றும் 2 வகுப்புகளுக்கான படிப்புச் சான்றிதழ் ஆகியவற்றின் அசல் மற்றும் நகலை முன்பதிவு செய்யும்போது எடுத்துச் செல்ல வேண்டும்.