அண்ணா பல்கலைக் கழகத்தில் வேலைவாய்ப்பு!! டிசம்பர்-20 கடைசி தேதி!
சென்னை அண்ணா பல்கலை கழகத்தில் தமிழாசிரியர் பணிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதுப்பற்றி அண்ணாபல்கலை கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது; அண்ணா பல்கலையில் புதிதாக இணைக்கப்பட்டுள்ள புதிய பாடத்திட்டத்தின் கீழ், அண்ணா பல்கலை மற்றும் அதன் உறுப்புக் கல்லூரிகளில் தமிழ்ப் பாடங்களை கற்பிக்க தற்காலிக ஆசிரியர் பணியிடங்களுக்கு உரிய கல்வித் தகுதி, சிறந்த கல்விப் பின்னணி மற்றும் சிறந்த கற்பித்தல் திறன் கொண்ட தகுதி வாய்ந்த ஆசிரியர்கள் டிசம்பர்-20 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அண்ணா பல்கலையில் 6 பணியிடங்களும், அதன் உறுப்பு கல்லூரிகளில் 17 பணியிடங்களும் காலியாக உள்ளன. பி,ஏ, எம்.ஏ. தமிழ் ஆகியவற்றில் பட்டம் பெற்று இருக்க வேண்டும். குறைந்தபட்ச மதிப்பெண்ணாக 55 சதவீதம் அல்லது அதற்கு இணையான கிரேடு பெற்றிருப்பதோடு, ஸ்லேட்,நெட்,செட் ஆகிய தேர்வுகளில் ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும். இவர்களுக்கு மாதம் தொகுப்பூதியமாக ரூ 25 ஆயிரம் வழங்கப்படும்.
பரிந்துரைக்கப்பட்ட படிவத்தில் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து உரிய கல்விச் சான்று நகல்களுடன்,நேரிடையாகவோ,அல்லது ஸ்கேன் செய்து பிடிஎஃப் வடிவில், [email protected] என்ற மின்னஞ்சல் முகவரியிலோ அனுப்பி வைக்க வேண்டும்.
அசல் விண்ணப்பங்கள் மற்றும் சான்றிதல்கள்,
முனைவர் பா.உமா மகேஸ்வரி,
இயக்குநர்,
பொறியியல் தமிழ்நுட்பத் தமிழ் வளர்ச்சி மையம் (CPDE Building),
அண்ணா பல்கலைகழகம், சென்னை- 600025,
தொலைபேசி எண்கள்: 044-22358592, 22358593 என்ற முகவரிக்கும் அஞ்சல் மூலமும் அனுப்பலாம். அனைத்து வழிகளிலும் டிசம்பர்- 20 ஆம் தேதி மாலை 5 மணிக்குள் சமர்பிக்க வேண்டும்.