மத்திய அரசினுடைய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரக்கூடிய காசநோய் ஆராய்ச்சிக்கான தேசிய நிறுவனம் தன்னிடத்தில் உள்ள காலி பணியிடங்கள் குறித்த அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது. அதிலும் குறிப்பாக சென்னை சேத்துப்பட்டில் இருக்கக்கூடிய நிறுவனத்தில் தற்பொழுது காலி பணியிடங்கள் இருப்பதாகவும் அதனை நிரப்புவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
பணி விவரங்கள் :-
✓ உதவியாளர்
✓ மேல் பிரிவு எழுத்தர்
✓ கீழ் பிரிவு எழுத்தர்
சம்பளம் மற்றும் பிற விவரங்கள் :-
✓ உதவியாளர் (குரூப் பி) இந்த பணிக்கான சம்பளம் 35,400 ரூபாய் லிருந்து 1,12,400 ரூபாய் வரை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் மொத்தம் 5 காலி பணியிடங்கள் இருப்பதாகவும் 4 காலி பணியிடங்கள் பொதுப் பிரிவினர் 1 இடம்பெறப் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு என ஒதுக்கப்பட்டிருக்கிறது. இந்த பணிக்கான வயது வரம்பு 18 முதல் 30 வரை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
✓ மேல் பிரிவு எழுத்தாளர் ( குரூப் சி )
இந்த பணிக்கான சம்பளம் 25500 முதல் 81100 ரூபாய் வரை என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதில் 1 காலி பணியிடம் மட்டுமே உள்ளது. இதற்கு பொதுப் பிரிவினர் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான வயது வரம்பு 18 வயது முதல் 27 வயது வரை என குறிப்பிடப்பட்டிருக்கிறது.
✓ கீழ் பிரிவு எழுத்தர் (குரூப் சி)
இந்த பணிக்கான சம்பளம் 19,900 முதல் 63,200 ரூபாய் வரை என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. மேலும் இதில் 10 காலி பணியிடங்கள் இருப்பதாகவும் அதில் 6 இடங்கள் பொதுப்பிரிவினருக்கு 2 இடங்கள் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு என பிரிக்கப்பட்டிருக்கிறது. மேலும் 1 பணியிடம் பட்டியல் இனத்தவருக்கும் 1 பணியிடம் பொருளாதாரத்தில் பின் தங்கிய பிரிவினருக்கும் என ஒதுக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வேலைக்கான வயது வரம்பு 18 முதல் 27 வரை என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
மேலே கூறப்பட்ட காலி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க நினைப்பவர்கள் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://icmr.gov.inNIRT மற்றும் https://nirt.res.in என்ற இணையதளங்களை பயன்படுத்தி விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.