இந்தியன் ரயில்வே வாரியத்தின் ( IRCTC ) மேலாளர் மற்றும் உதவி மேலாளர் பணியிடங்கள் காலியாக இருப்பதாக அறிவிக்க வெளியாகி இருக்கிறது. இந்த பணிகளுக்கு எழுத்து தேர்வு கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.
IRCTC இல் பணிபுரிய வேண்டும் என நினைக்கக் கூடியவர்கள் அதிகாரப்பூர்வ இணையதளமான irctc.com என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கும் படியும் இதற்கான கடைசி நாள் ஏப்ரல் 25 2025 என தெரிவிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. இதற்கான விண்ணப்பங்கள் அஞ்சல் வழியில் மட்டுமே பெறப்படும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
கல்வி தகுதி :-
மேலாளர் மற்றும் உதவி மேலாளர் பணிகளுக்கு விண்ணப்பிக்க நினைப்பவர்கள் ஏதேனும் ஒரு அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் கட்டாயமாக பட்டப்படிப்பு அதிலும் குறிப்பாக பிஎஸ்சி, பி டெக் அல்லது பி இ பட்டம் பெற்றவராக இருத்தல் வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்பம் அல்லது மேலாண்மையில் பயிற்சி பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பிக்கக் கூடியவர்களுக்கு வயது வரம்பு 55க்குள் இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
எழுது தேர்வுக்கு பதிலாக நேர்காணல் அல்லது சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் மேலாளர் மற்றும் உதவி மேலாளர் பணிகளுக்கான தேர்வு நடைபெறும் என்றும் இதில் தகுதியும் அனுபவம் வாய்ந்தவர்களுக்கு முதலில் வாய்ப்பு வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிகளுக்கு தேர்ந்தெடுக்கக்கூடிய நபர்களுக்கு சம்பளம் 67 ஆயிரம் ரூபாய் வரை வழங்கப்படும் என்றும் இதற்கான விண்ணப்பங்களை கட்டாயமாக அஞ்சல் வழியில் மட்டுமே சமர்ப்பிக்க வேண்டும் என்றும் IRCTC தெரிவிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.