இந்திய அஞ்சல் துறையில் உள்ள காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பினை மத்திய அரசு வெளியிட்டிருக்கிறது. இதன்படி இந்திய அஞ்சல் துறையில் 21,413 கிராமின் தாக் சேவாக் பணியிடங்கள் காலியாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
தமிழகத்தில் மட்டும் மூன்று பதவி நிலைகளில் 2292 காலி பணியிடங்களை நிரப்ப இந்திய அஞ்சல் துறை திட்டமிட்டு இருக்கிறது. அதன்படி,
✓ கிளை போஸ்ட் மாஸ்டர்
✓ அசிஸ்டன்ட் கிளை போஸ்ட் மாஸ்டர்
✓ தாக் சேவாக்
மேலே குறிப்பிட்ட பணிகளுக்கு விண்ணப்பிக்க கூடியவர்கள் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களாக இருத்தல் வேண்டும் என்றும் அதில் தமிழ் மொழி கட்டாயம் இடம் பெற்றெடுத்தல் வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
அதோடு கூடவே கணினி கற்றிருத்தல், சைக்கிள் ஓட்டு தெரிதல் மற்றும் போதுமான வாழ்வாதாரம் இருக்கக்கூடியவராக இருத்தல் வேண்டும் என்றும் அவர்களுக்கான வயதுவரம்பு 18 முதல் 40 வயது வரை உள்ளவர்கள் என நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. மேலும், OPC பிரிவினருக்கு 3 ஆண்டுகள் வயதுவரம்பு தளர்வு என்றும் SC/ST பிரிவினருக்கு 5 ஆண்டுகள் வயதுவரம்பு தளர்வு என்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு 10 முதல் 15 ஆண்டுகள் வயதுவரம்பு தளர்வு என்றும் மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
சம்பள விவரம் :-
✓ கிளை போஸ்ட் மாஸ்டர் – ரூ.12,000 to ரூ.29,380
✓ அசிஸ்டன்ட் கிளை போஸ்ட் மாஸ்டர் – ரூ.10,000 to ரூ.24,470
✓ தாக் சேவாக் – ரூ.10,000 to ரூ.24,470
இந்த பணிக்கு எழுத்து தேர்வு எதுவும் கிடையாது என்றும் விண்ணப்பிப்பவர்களின் மதிப்பெண் அடிப்படையில் தகுதி பட்டியல் தயார் செய்து அதன் பின் சான்றிதழ் சரி பார்ப்பிற்கு அழைக்கப்படுவர் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த பணிக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கும் பொழுது கல்வி சான்றிதழ் கையொப்பம் புகைப்படம் அனைத்தையும் பதிவேற்றும் செய்தல் அவசியம்.
என்ன விண்ணப்பங்களை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என்றும் விண்ணப்பிக்க கடைசி தேதி மார்ச் 3 என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. எனவே இதற்கு விருப்பம் உள்ளவர்கள் உடனடியாக இ சேவை மையங்களுக்கு சென்று தங்களுடைய விண்ணப்பங்களை பதிவு செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.