இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான மூன்றாவது போட்டி தற்போது கப்பா மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்தியா தற்போது ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. அதில் முதல் 2 போட்டிகளில் இந்திய அணி ஒரு போட்டியும் ஆஸ்திரேலிய அணி ஒரு போட்டியும் வெற்றி பெற்றுள்ளது.
இந்நிலையில் இரு அணிகளும் சம நிலையில் உள்ளதால் மூன்றாவது போட்டி மிக முக்கியமான போட்டியாக பார்க்கப்பட்டது. இந்நிலையில் போட்டி நடக்கும் முன் இந்த மைதானத்தில் 5 நாட்களும் மழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்திருந்தது. அதுபோலவே முதல் நாள் மழை காரணமாக போட்டி நடைபெறவில்லை.
இரண்டாம் நாள் தொடங்கி ஆஸ்திரேலியா அணி 445 ரன்கள் அடித்தது ஆல் அவுட் ஆனது. தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணி பேட்டிங் செய்து வந்தது. ஆஸ்திரேலியா அணியின் பந்து வீச்சை எதிர்கொள்ள முடியாமல் முக்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்த நிலையில் மழை அடிக்கடி குறுக்கிட்டு வந்த நிலையில் இடைவெளி விடு இடைவெளி விட்டு விளையாடி வந்த நிலையில் பிறகு மழை நீடிக்கும் என தெரிந்து 3 ம் நாள் போட்டியானது நிறுத்தப்பட்டது. நாளை தொடங்க உள்ள போட்டியில் இந்திய அணி எவ்வாறு ஆஸ்திரேலியா அணியை எதிர்கொள்ள உள்ளது என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.