ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையிலான மோதல் கடந்த சில காலங்களாகவே நடைபெற்று வருகின்றன. ரஷ்ய அதிபர் புதின் தற்போது ரஷ்யம் மற்றும் உக்ரைன் இடையிலான போருக்கான அமைதிப் பேச்சுவார்த்தை நடத்த தயாராக உள்ளதாக கூறப்பட்டு வருகிறது.
உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையிலான போரானது தற்போது தொடங்கியது அல்ல 2022 ஆம் ஆண்டு முதல் இந்த போரானது நடைபெற்று வருகிறது. சமீப காலங்களாக இந்த மோதல் அமைதியான சூழல் நிலவி வந்தது. ஆனால் தற்போது மீண்டும் இரு நாடுகளும் மாறி மாறி தாக்குதல் நடத்தி வருகின்றன. இதனால் பாதிக்கப்படுவது அங்குள்ள அப்பாவி மக்கள் தான் இதனால் ரஷ்ய அதிபர் புதின் தற்போது புதிய முடிவை எடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
அதில் புதன் கூறியதாவது இதற்கு முன் புதின் போரை நிறுத்துவதற்கு பலவிதமான நிபந்தனைகள் விதித்து வந்த நிலையில் தற்போது எந்த நிபந்தனையும் இல்லாமல் போரை முடிக்க தயாராக இருப்பதாக புதன் கூறியுள்ளார். இவர் இப்படி கூறிய கருத்து தற்போது ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
இந்நிலையில் புதினிடம் பல தற்காலிகமாக இந்த போரை நிறுத்த அறிவுரை கூறியும் அதை நிராகரித்தார். ஆனால் தற்போது புதின் நிரந்தர தீர்வை எந்தவித நிபந்தனையும் இல்லாமல் தற்போது பேச்சு வார்த்தைக்கு தயாராக இருப்பதாக ரஷ்ய அதிபர் புதின் கூறியுள்ளார்.