தீராத கடன் தொல்லை!! அதற்காக தம்பதியினர் எடுத்த வித்தியாசமான முடிவு!!
தீராத கடன் தொல்லையால் அவதிப்பட்ட வந்த தம்பதியினர் ஐந்து நட்சத்திர விடுதியில் அறை எடுத்து தங்கி தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
பதைபதைப்பான இந்த சம்பவம் கேரள மாநிலத்தில் நடைபெற்று உள்ளது.
கேரளாவை சேர்ந்தவர்கள் சுகந்தன் வயது 70. மனைவி சுனிலா வயது 60. கணவன் மனைவி இருவரும் வெளிநாட்டில் வேலை செய்து சம்பாதித்து விட்டு தனது சொந்த மண்ணான கேரளா மாநிலம் திரும்பி ஏராளமான சொத்துக்களை வாங்கி சொந்தமாக தொழில் செய்து வந்தனர். அப்போது துரதிஷ்டவசமாக அவர்களின் தொழில் நஷ்டத்தில் சென்றதால் ஏராளமாக கடன் தொல்லை அதிகரித்தது. இந்த கடனை திருப்பி செலுத்த முடியாமல் அவர்கள் தத்தளித்து வந்துள்ளனர்.
இந்த சூழ்நிலையில் கடந்த ஓணம் பண்டிகை முன்னிட்டு ஐந்து நட்சத்திர விடுதி ஒன்றில் ரூம் எடுத்து தங்கி உள்ளனர். அதன் பின்னர் கணவன் மனைவி இருவரும் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இருவரும் தற்கொலை செய்வதற்கு முன்னால் தற்கொலைக்கான காரணமாக தீராத கடன் தொல்லையே எங்கள் இருவரின் முடிவுக்கு காரணம் என்றும் வேறு யாரும் காரணம் இல்லை எனவும் தனது மகளை யாரும் தொந்தரவு செய்ய வேண்டாம் எனவும் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
இவர்கள் இருவரும் ரூம் எடுத்து தங்கி இருந்த 5 நட்சத்திர ஹோட்டலில் தான் அவர்களது ஒரே பெண்ணிற்கு மிகவும் கோலாகலமாக திருமணமும் நடைபெற்றுள்ளது. அதுமட்டுமில்லாமல் சில மாதங்களுக்கு முன்பே இருவரும் இதே ஹோட்டலில் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு கணவன் மனைவி இருவரும் மீட்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.