TVK: தஞ்சை செங்கிப்பட்டி-யில் தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகள் சந்திப்பு இன்று நடைபெற்றது. இதில் ஆரம்பத்தில் விஜய் பேசுகையில், திமுக குறித்து விமர்சனம் செய்திருந்தார். மேற்கொண்டு, இரண்டு கட்சிகள் தன்னை அவரவர் பொழப்பை கெடுக்க வந்த நபர் என எண்ணி பல வழிகளில் நெருக்கடி தருவது குறித்தும் குற்றம்சாட்டினார். இறுதியில், தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைந்தால் என்னென்ன கட்டமைப்புகள் விவசாயிகளுக்கு இருக்கும் என்பதை விளக்கினார்.
அதில் அவர் கூறியதாவது, கட்டாயம் நெல் வீணாகாமல் பார்த்துக் கொள்வதோடு மூட்டையை ஏற்றி இறக்க ஒரு பைசா கமிஷன் வாங்காமல் நடவடிக்கை எடுக்கப்படும். அடிப்படை வசதியான கல்வி மருத்துவம், ரேஷன், சாலை வசதி உள்ளிட்டகைகளுக்கும் முன்னுரிமை வழங்குவோம். குறிப்பாக விவசாயிகளுக்கு சாதகமற்ற முறையில் இருக்கும் எந்த திட்டங்களாக இருந்தாலும் கட்டாயம் நிராகரிக்கப்படும் என்று உறுதியளித்துள்ளார்.
இதனையெல்லாம் தாண்டி இரண்டு ஏக்கர் வரை நிலம் உள்ள விவசாயிகள் மற்றும் நிலம் இல்லாதவர்களின் குழந்தைகளுக்கான பொறியியல் மருத்துவம் படிப்பிற்கான முழு செலவுகளையும் அரசே ஏற்கும் என கூறியுள்ளார். இந்த அறிவிப்பானது மக்கள் மத்தியில் வரவேற்கப்படும் என அரசியல் வல்லுநர்கள் கூறுகின்றனர். தஞ்சை மண்ணில் விவசாயிகளுக்கு ஏற்ப பல நலத்திட்டங்கள் குறித்து அறிவிப்பை வெளியிட்டுள்ளது தவெக வின் அடுத்த அரசியல் நகர்வாக பார்க்கப்படுகிறது.