தனியார் ஹோட்டல் ரூமில் ரத்தம் சிந்த சிந்த சடலமாக கிடந்த பொறியியல் கல்லூரி மாணவி!!

Photo of author

By Parthipan K

தனியார் ஹோட்டல் ரூமில் ரத்தம் சிந்த சிந்த சடலமாக கிடந்த பொறியியல் கல்லூரி மாணவி!!

Parthipan K

Engineering college student found dead in private hotel room!!

தனியார் ஹோட்டல் ரூமில் ரத்தம் சிந்த சிந்த சடலமாக கிடந்த பொறியியல் கல்லூரி மாணவி!!

பெரியபட்னா தாலுக்காவில் உள்ள ஹரலஹள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் தான் அபூர்வா ஷெட்டி.இவருடைய வயது  21.இவர் தனியார் பொறியியல் கல்லூரியில் இறுதியாண்டு படித்து வருகின்றார்.சென்ற மாதம்  29 ஆம் தேதி அபூர்வாவும் மற்றும் அவரது காதலன் ஹின்கல் பகுதியைச் சேர்ந்த ஆஷியும் அங்குள்ள ஒரு தனியார் ஹோட்டலில் ரூம் எடுத்தனர்.

செப்டம்பர் 1ஆம் தேதி காலை அறையை விட்டு வெளியே சென்ற காதலன் பல மணிநேரம் ஆகியும்  அபூர்வா  வெளியே வராததால் ஹோட்டல் ஊழியர்களிடம் சந்தேகம் எழும்பியது.ஏதோ நடந்துள்ளது என எண்ணி போலீசாருக்கு  தகவல் தெரிவித்தனர்.தகவலின் பேரில்  போலீசார் விரைந்து வந்தனர்.

பின் அறையில் இருக்கும் கதவை தட்டினர் எந்த பதிலும் இல்லாததால் கதவை உடைத்து உள்ளே சென்றனர்.அறையின் உள்ளே வந்து  பார்த்தபோது அபூர்வா பிணமாக கீழே கிடந்தார்.அப்போது அவரின் மூக்கில் இருந்து ரத்தம் கசிந்திருந்ததை  போலீசார்கள் கவனித்தனர்.இதனைதொடர்ந்து இவருடன் யார் இருந்தார் ?எப்போது அவர் வெளியே சென்றார் என ஹோட்டல் ஊழியரிடம் விசாரித்தனர் .அவரின் இந்த நிலைமைக்கு அவருடன் வந்தவர் தான்  காரணமாக இருக்கும் என எண்ணி  காதலனை வெள்ளிக்கிழமை காலை போலீசார்கள் கைது செய்தனர்.

இது குறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து காதலனை விசாரணை நடத்தி வருகிறனர்.மேற்கொண்டு விசாரணை முடிந்த பின்னரே கொலைக்கான காரணம் தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர். இச்சம்பவம் ஹோட்டலில் உள்ள அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.