இந்திய பவுலர்களை பொளந்துகட்டி இந்தியாவை வீட்டுக்கு அனுப்பிய இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள்!

0
136

இந்திய பவுலர்களை பொளந்துகட்டி இந்தியாவை வீட்டுக்கு அனுப்பிய இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள்!

டி20 உலக கோப்பையில் இரண்டாவது அரையறுதி போட்டி இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே ஆஸ்திரேலியாவின் அடிலெய்டு மைதானத்தில் நடைபெற்றது. இதில் இங்கிலாந்து அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்குள் சென்றுள்ளது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் ஜோஸ் பட்லர் முதலில் பந்துவீச முடிவு செய்தார். அதன்படி களமிறங்கிய இந்திய அணியில் ராகுல் மற்றும் ரோஹித் ஷர்மா ஆகிய இந்த தொடர் முழுவதும் சொதப்புவதை போலவே இந்த போட்டியிலும் குறைந்த ரன்களில் ஆட்டமிழந்து சொதப்பினர்.

இதையடுத்து வந்த கோலி மற்றும் ஹர்திக் பாண்ட்யா ஆகியோர் மட்டுமே சிறப்பாக விளையாடி அரைசதம் அடித்தனர். இதனால் இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 168 ரன்கள் சேர்த்தது.

இதன் பின்னர் ஆடிய இங்கிலாந்து அணி கொஞ்சம் கூட திணறாமல் இலக்கை விக்கெட் இழப்பின்றி எளிதாக எடுத்தது. இங்கிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான ஜோஸ் பட்லர் ஜோஸ் பட்லர் 49 பந்துகளில் 80 ரன்களும்,  அலக்ஸ் ஹேல்ஸ் 47 பந்துகளில் 86 ரன்களும் சேர்த்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

இவர்களின் பார்ட்னர்ஷிப்பை பிரிக்க முடியாமல் இந்திய பவுலர்கள் திணறினர். ஆனால் அனைவரையும் மிகவும் எளிதாக எதிர்கொண்டு பந்துகளை சிக்ஸர்களாகவும், பவுண்டரிகளாகவும் விரட்டினர். இந்தியா கடந்த சில ஆண்டுகளாகவே ஐசிசி தொடர்களில் நாக் அவுட் சுற்றுகளில் மோசமாக சொதப்பி வருகிறது.

ஞாயிற்றுக் கிழமை நடக்கும் இறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணி பாகிஸ்தானை எதிர்கொள்ள உள்ளது.

Previous articleஆசிரியர்களுக்கு ஷாக் நியூஸ்! பள்ளி கல்வித்துறை வெளியிட்ட திடீர் அறிவிப்பு!
Next articleமோடியா..ஸ்டாலினா..போட்டி போட்டு நட்ட கொடி! கண்டித்த போலீசாரிடமே கைவரிசையை காட்டிய பாஜக!