இந்த போட்டியையும் இலவசமாக கண்டு களிக்கலாம்!!! கிரிக்கெட் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ஜியோ சினிமா!!! 

0
119
#image_title

இந்த போட்டியையும் இலவசமாக கண்டு களிக்கலாம்!!! கிரிக்கெட் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ஜியோ சினிமா!!!

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதும் ஒருநாள் தொடரை ஜியோ சினிமாவில் இலவசமாக காணலாம் என்று ஜியோ சினிமா அதிரடியாக அறிவித்து கிரிகெட் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளது.

இந்தியாவுக்கு சுற்றுபயணம் மேற்கொள்ளும் ஆஸ்திரேலிய அணி மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடவுள்ளது. இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் மோதும் ஒரு நாள் தொடர் செப்டம்பர் 22ம் தேதி தொடங்குகின்றது. இதையடுத்து இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் மோதும் ஒருநாள் போட்டிகளை இலவசமாக பார்க்கலாம் என்று ஜியோ சினிமா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இது தொடர்பாக ஜியோ சினிமா இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை ஜியோ சினிமா செயலியில் ரசிகர்கள் அனைவரும் இலவசமாக பார்க்கலாம். மேலும் இந்த போட்டியை தமிழ், ஆங்கிலம், ஹிந்தி உள்பட 11 மொழிகளில் ரசிகர்கள் காணலாம்” என்று தெரிவித்துள்ளது.

உலகக் கோப்பை தொடருக்கு முன்னதாக நடைபெறும் ஒருநாள் போட்டிகள் கொண்ட இந்த தொடர் இரண்டு அணிகளுக்கும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகின்றது. இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் மோதும் ஒருநாள் தொடருக்கான போட்டி அட்டவனை

* இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதும் முதல் ஒருநாள் போட்டி செப்டம்பர் 22ம் தேதி மொஹாலியில் நடைபெறுகின்றது.

* இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதும் இரண்டாவது ஒருநாள் போட்டி செப்டம்பர் 24ம் தேதி இந்தூரில் நடைபெறுகின்றது.

* இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதும் மூன்றாவது போட்டி செப்டம்பர் 27ம் தேதி ராஜ்கோட்டில் நடைபெறுகின்றது.

இந்தியா அணி தற்பொழுது ஆசியக் கோப்பை ஒருநாள் போட்டி தொடரில் விளையாடி வருகின்றது. ஆஸ்திரேலிய அணி தென்னாப்பிரிக்கா சென்று தென்னாப்பிரிக்கா அணியுடன் ஒருநாள் தொடரில் விளையாடி வருகின்றது.

 

Previous article‘இந்தியா’ கூட்டணி இந்து மதத்திற்கு எதிரான கொள்கையை கொண்டவர்களாக உள்ளனர் – பிரதமர் மோடி ஆவேசம்!!
Next articleபிரபல நடிகர் குறித்து பரவிய வதந்தி!!! சமூகவலைதளத்தில் வதந்திகளுக்கு தக்க பதில் கொடுத்த பிரபல நடிகர்!!!