‘இந்தியா’ கூட்டணி இந்து மதத்திற்கு எதிரான கொள்கையை கொண்டவர்களாக உள்ளனர் – பிரதமர் மோடி ஆவேசம்!!

0
38
#image_title

‘இந்தியா’ கூட்டணி இந்து மதத்திற்கு எதிரான கொள்கையை கொண்டவர்களாக உள்ளனர் – பிரதமர் மோடி ஆவேசம்!!

இந்த ஆண்டு இறுதியில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவிருக்கும் மத்தியப் பிரதேச மாநிலத்தின் சாகர் மாவட்டம்,பினா நகரில் சுமார் 51,000 கோடி ரூபாய் மதிப்பிலான தொழில் துறை திட்டங்களுக்கு பாரத பிரமர் மோடி நேற்று அடிக்கல் நாட்டினார்.

இதனை தொடர்ந்து பொதுக் கூட்டத்தில் பங்கேற்ற பிரதமர் பேசியதாவது,சுவாமி விவேகானந்தர்,லோக்மான்ய திலகருக்கு உத்வேகம் அளித்த சனாதன தர்மத்தை ‘இந்தியா’ கூட்டணி கட்சியினர் அடியோடு ஒழிக்க நினைக்கிறார்கள்.அவர்கள் இந்து மதத்திற்கு எதிரான கொள்கையை கொண்டவர்களாக திகழ்கிறார்கள்.நமது பாரதம் ஒன்றுபட்டு இருக்க சனாதன தர்மமே முக்கிய காரணம்.

அப்படி இருக்கையில் இந்த சனாதன தர்மத்தை எப்படியாவது ஒழித்து வேண்டுமென்று எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்த ‘இந்தியா’ கூட்டணி தொடர்ந்து பேசி வருகிறது.
இவர்களின் சனாதனம் மீதான தாக்குதல் நாட்டின் கலாச்சாரம் மீதான தாக்குதல்.இவர்கள் எவ்வளவு தான் சனாதனத்தைதாக்கி பேசினாலும் அது வளர்ந்து கொண்டேதான் இருக்குமே தவிர ஒருபோதும் அழியாது.

சனாதனத்தை பின்பற்றுபவர்கள் இந்தியா கூட்டணியிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.நமது அமைப்பு மற்றும் ஒற்றுமையின் பலத்துடன் இந்தியா கூட்டணியின் திட்டங்களை முறியடிக்க வேண்டும்.இன்று இந்தியா உலகை ஒன்றிணைக்கும் திறனை சிறப்பாக வெளிப்படுத்தி வருகிறது.இதனால் ஒட்டு மொத்த உலக நாடுகளின் நண்பனாக இந்தியா வளர்ந்து கொண்டு வருகிறது.

ஆனால் மறுபுறம் இந்தியா கூட்டணி கட்சிகள் நம் நாட்டையும்,சமூகத்தையும் பிளவுபடுத்த முயற்சிக்கின்றன.எதிர்கட்சிகளின் இந்தியா கூட்டணியில் இருப்பவர்கள் தலைகனம் பிடித்தவர்களாக இருக்கின்றனர் என்று எதிர்கட்சிகளை சாடினார்.

தொடர்ந்து பேசிய அவர் நடப்பு ஆண்டிற்கான ஜி20 மாநாட்டை நமது பாரதம் வெற்றிகரமாக நடத்தியது என்பதை நீங்கள் அனைவரும் அறிந்திருப்பீர்கள்.இந்த ஜி20 மாநாட்டின் வெற்றிக்கான பெருமை முழுவதும் நாட்டு மக்களையே சாரும்.இதற்கு முன் மத்திய பிரதேசத்தை ஆட்சி செய்தவர்கள் இந்த மக்களுக்கு ஒன்றும் செய்யவில்லை.ஊழல் மற்றும் குற்றங்களை தவிர அவர்கள் வேற எதுவும் செய்யவில்லை.ஆனால் அதன் பின் பொறுப்பேற்ற பாஜக அரசு மக்களின் நலனுக்காக பல்வேறு நலத்திட்டங்களையும்,வேலைவாய்ப்பையும் வழங்கி வருகிறது என்று விழா கூட்டத்தில் பேசினார்.

முன்னதாக செப்டம்பர் 2 அன்று தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் சார்பில் நடத்தப்பட்ட சனாதன ஒழிப்பு மாநாட்டில் பேசிய தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சனாதன தர்மத்தை எதிர்க்கக் கூடாது,அதை ஒழிக்க வேண்டுமென்று கூறினார்.இவரின் இந்த சர்ச்சைக்குரிய பேச்சு நாடு முழுவதும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.இந்நிலையில் உதயநிதி ஸ்டாலினின் இந்தப் பேச்சை முன்வைத்து ‘இந்தியா’ கூட்டணியை பிரதமர் மோடி கடுமையான விமர்சித்து பேசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.