மஞ்சள் நிறத்தில் மாறிய எண்ணூர் கடல் – வேதனையில் மீனவர்கள்!!
சென்னை எண்ணூர் கடல் மற்றும் கொசஸ்தலை ஆறு சேரும் இடமான முகத்துவார பகுதியில், மீன் பிடிக்கும் தொழில் நடக்கிறது.
எண்ணூரில் மட்டும் 8 மீனவ குப்பங்கள் இருக்கிறது, அவற்றின் அங்கமாக விளங்கும் கொசஸ்தலை ஆறு நேற்று முதல் மஞ்சள் நிறமாக மாறியுள்ளது.
திடீரென தண்ணீர் மஞ்சள் நிறமாக மாறியதை கண்ட மீனவர்கள் அதிர்ச்சி அடைந்து, அதை வீடியோவாக எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

பின் இதுகுறித்து மீன் வளத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டது, தகவலின் பெயரில் முகத்துவார வந்தா அதிகாரிகள், மேற்பார்வையிட்டு மஞ்சளாக மாறிய தண்ணீரை எடுத்து, பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர்.
இதுதொடர்ச்சியாக மீனவர்களிடம் விசாரணை மேற்கொண்டதில் : இதற்கு முன்னும் தண்ணீரின் நிறம் மஞ்சள் நிறத்தில் காணப்பட்டதாகவும், கொசஸ்தலை ஆற்றுக்கு பின் இருக்கும். “மத்திய அரசு தொழிற்சாலையில் உள்ள கழிவுநீர்” இதில் கலப்பதே இதற்கு காரணம் என்று கூறுகின்றனர்.
கடந்த சில மாதங்களாகவே மீன்கள் செத்து மிதப்பதாகவும், ராசாயணம் கலந்ததால் அதை விற்பனை செய்ய முடியவில்லை என்றும் வேதனை தெரிவித்துள்ளனர்.
இதை பற்றி பலமுறை மீன் வளத்துறைக்கு மனு அனுப்பியுள்ளோம், ஆனால் அதற்கான நடவடிக்கை எதுவும் அவர்கள் மேற்கொள்ள வில்லை.
மீண்டும் நேற்று காலையில் இருந்து தண்ணீர் மஞ்சள் நிறத்தில் மாறியுள்ளது, 2 நாட்களாக மீன் பிடிக்க செல்லததால், மீன் விற்பனை சரிந்துள்ளது.
இப்படியே இவை தொடர்ந்தால் எண்ணூரை சுற்றியுள்ள 8 பகுதி மீனவர்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்படும்.
எனவே அரசு அதற்கு எதாவது வழி செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.
பரிசோதனைக்கு அனுப்பட்ட தண்ணீரின், பரிசோதனை ரிபோர்ட் வந்தவுடன் விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும். மீனவர்கள் யாரும் கவலைக்கொள்ள வேண்டாம்.
இதை பற்றி மீன் வளத்துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணனிற்கு புகார் அளிக்கிறோம். என்று மீன் வளத்துறை அதிகாரி மீனவர்களுக்கு ஆதரவாக பேசினார்.