ஒருவரின் நகத்தை வைத்து குணத்தை கண்டுபிடிக்க முடியும்! இதில் நீங்க எப்படி என தெரிந்து கொள்ளுங்கள்

0
101

ஒருவரின் நகத்தை வைத்து குணத்தை கண்டுபிடிக்க முடியும்! இதில் நீங்க எப்படி என தெரிந்து கொள்ளுங்கள்

ஒருவரின் வெளிப்புறத் தோற்றத்தை வைத்து அவர் எப்படிப்பட்டவர் என்று சொல்லிவிட முடியும்.  மேலும் அவர்  என்ன குணமுடையவர் என்றும் எளிதாக கண்டுபிடிக்க முடியும். அதிலும் குறிப்பாக கைவிரல் நீளம் வைத்து அவர் எந்த குணம் உடையவர் என்று எளிதாக அறிந்து கொள்ள முடியும். சிலர் கைகளில் உள்ள ரேகைகளை வைத்து அவர் என்ன குணம் உடையவர் அவர் எப்படிப்பட்டவர் என்று கூறுவார்கள்.

ஆனால் கை விரல் நகத்தை வைத்து அவர் எப்படிப்பட்டவர் என்று எளிதில் தெரிந்து கொள்ள முடியும். மேலும் உங்கள் கைவிரல்களை வைத்து உங்கள் உடலில் இருக்கும் ஹார்மோன் அளவை கூட சொல்லிவிட முடியும் என்று சாஸ்திரங்கள்  கூறுகிறது. அவைகளில் குறிப்பாக ஆள்காட்டி விரல் மற்றும் மோதிர விரல் தன்மையில் வைத்து கணக்கிடப்படுகிறது.

அதுபோல தற்போது கைவிரல் நகத்தை வைத்து ஆளுமை பண்பு, பலம்,  பலவீனம் மற்றும் மனநிலையை தெரிந்து கொள்ள முடியும் என்று கூறுகிறார்கள். நீங்கள் மறைக்கும் ஆளுமை பண்பை உங்கள் கை நகம் வெளிப்படுத்தும் என்கிறார்கள். கைவிரல் நகங்கள் நான்கு வகையாக பிரிக்கப்பட்டுள்ளது. செங்குத்தான நீண்ட நகங்கள், அகலமான நகங்கள், வட்ட நகங்கள் மற்றும்  சதுர நகங்கள் என்று உள்ளது.  அவற்றின் ஆளுமை பண்புகளை தெரிந்து கொள்வோம்.

1. செங்குத்தாக நீண்ட நகங்கள்

செங்குத்தாக நீண்ட நகங்கள் உள்ளவர்கள் கற்பனை,  நுணுக்கம் படைப்பாற்றல் சார்ந்து இருப்பார்கள். அதனையடுத்து அவர்கள் அமைதியாகவும் சுதந்திரமாகவும் நடைமுறை சிந்தனையுடனும் வாழ்வார்கள். அவ்வாறு இருப்பவர்களுக்கு வலது மூளையை விட இடது மூளை வளர்ச்சி அடைந்து காணப்படும். அதனைத் தொடர்ந்து அவர்கள் மற்றவர்களிடம் பணிவாகவும்  மென்மையாகவும் நடந்து கொள்வார்கள். மேலும் அவர்கள் வாழ்க்கையில் எவ்வளவு மன அழுத்தமாக இருந்தாலும் எளிதாக சமாளிப்பார்கள்.

2. அகலமான நகங்கள்

அகலமான நகங்கள் உடையவர்கள் வெளிப்படை தன்மைகள் மற்றும் பொறுப்பு நிறைந்தவராக இருப்பார்கள். இவர்கள் மிகச் சிறந்த தன்னம்பிக்கையை கொண்டு வாழ்வார்கள்.  இவர்கள் திறந்த மனம் உடையவர்கள் மற்றும் எதைப் பார்த்தும் பயப்படாமல் இருப்பார்கள். இவர்கள் மற்றவரின் யோசனையை கேட்டு வாழ்க்கையில் முன்னேறுவார்கள். மேலும் இவர்கள் வசதியாகவும், நிம்மதியாகவும் இருப்பார்கள். இவர்கள் மற்றவரின் மனநிலையை படிப்பதில் சிறந்தவராக திகழ்வார்கள். அதனையடுத்து அவர்கள் சொந்தங்களை உருவாக்குவதில்  சிறந்தவராகவும் இருப்பார்கள்.

3. வட்ட வடிவ நகங்கள்

வடிவ நகங்கள் உள்ளவர்கள் அமைதியாகவும், எளிதில் பதற்றம் அடையவும் மற்றும் மன அழுத்தத்திற்கு உள்ளாக மாட்டார்கள். இவர்கள் புதிய தகவல்களை தேடுவார்கள் மற்றும் அதிக அளவில் கேள்வி கேட்பார்கள். மேலும் இவர்கள் அவர்களின் தேவைகளை விட மற்றவர்களின் தேவைகளை விரைவில் பூர்த்தி செய்வார்கள். இவர்கள் மற்றவர்களிடம் அதிக அன்பை வெளிப்படுத்துவார்கள்.

4. சதுர வடிவ நகங்கள்

சதுர நகங்கள் உடையவர்கள் மற்றவர்கள் சொல்வதை கேட்க விரும்ப மாட்டார்கள். அவர்கள் எந்த ஒரு விஷயமாக இருந்தாலும் அவர்களை சொந்தமாக முடிவு எடுக்க விரும்புவார்கள். இவர்கள் எப்போதும் புதிய விஷயங்களை அதிக அளவில் தேடுவார்கள். இவர்கள் அதிக அளவில் சாகசம் மீதான காதலை கொண்டு இருப்பார்கள். மேலும் இவர்கள் புதிய இடங்களை ஆராய்ந்து பார்க்கவும் சுற்றுலா பயணம்  மேற்கொள்வதை அதிக அளவில் விரும்புவார்கள். இவர்கள் தொழில் லட்சியங்கள் மற்றும் கடினமாகவும் உழைப்பார்கள். மேலும் இவர்கள் மற்றவர்களை அதிக அளவில் ஊக்கப் படுத்துவார்கள்.

இதுபோன்று நகங்களை வைத்து அவர்கள் என்ன குணம் நிறைந்தவர்கள் அவர்களுக்கு என்ன திறமை உண்டு என்பதை எளிதில் தெரிந்து கொள்ள முடியும்.

Previous articleகுடிப்பழக்கத்திலிருந்து 40 நாட்களில் விடுபடலாம்! அற்புதமான ரகசிய மூலிகை செடி!நீங்களும் ட்ரை பண்ணி பாருங்கள்
Next articleஇதோ உங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு கடைசி நாள் ஜுலை 25!! உடனடியாக விண்ணப்பியுங்கள்!!