ஆவின் நிறுவனத்தில் செறிவூட்டப்பட்ட பசும்பால்!! இன்று முதல் அறிமுகம்!!

Photo of author

By CineDesk

ஆவின் நிறுவனத்தில் செறிவூட்டப்பட்ட பசும்பால்!! இன்று முதல் அறிமுகம்!!

CineDesk

Enriched cow's milk in Aavin's company!! Introducing today!!

ஆவின் நிறுவனத்தில் செறிவூட்டப்பட்ட பசும்பால்!! இன்று முதல் அறிமுகம்!!

ஆவின் நிறுவனத்தில் ஏற்கனவே நான்கு வகையான பால்கள் விற்கப்பட்டு வருகிறது.  இருமுறை சமன் படுத்தப்பட்ட பால், சமன் படுத்தப்பட்ட பால், நிலைப்படுத்தப்பட்ட பால் மற்றும் நிறை கொழுப்பு பால் என நான்கு வகையான பால்கள், நான் விதமான வண்ண கவர்களில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில் வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் டி இரண்டும் சேர்த்து செறிவூட்டப்பட்ட பசும்பால் ஆவின் நிறுவனத்தால் இன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த பாலானது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, கண் பார்வையை மேம்படுத்தி, எலும்புகளை வலுப்படுத்துகிறது.

தற்போது ஆவின் நிறுவனம், தமிழகம் முழுவதும் உள்ள கிராம புறங்களில் இருந்து, கிராமப்புற கூட்டுறவு சங்கங்கள் மூலம் பால் கொள்முதல் செய்து, அதை பதப்படுத்தி விற்பனைக்கு கொண்டு செல்கிறது. ஆவின் நிறுவனம் தினமும் 30 லட்சம் லிட்டர் பால் விற்பனை செய்து வருகிறது. கடந்த ஆண்டை ஒப்பிடும் போது இந்த ஆண்டு 3 லட்சம் லிட்டர் பால் விற்பனை அதிகரித்துள்ளது.

வாடிக்கையாளர்களின் நலன் கருதியும், பால் விற்பனையை மேலும் அதிகரிக்கவும், இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர ஆணையத்தால் அனுமதிக்கப்பட்ட அளவில் வைட்டமின் ஏ மற்றும் டி சேர்த்து செறிவூட்டப்பட்ட பசும்பால் இன்று அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.  இது ஊதா நிற கவர்களில் கிடைக்கும். அரை லிட்டர் 22 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இது முதல் கட்டமாக சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் விற்பனை செய்யப்படுகிறது.