ஒரு மாம்பழத்தின் விலை 19000 ரூபாய்! சாதனை செய்து காட்டிய விவசாயி!!

0
114
#image_title
ஒரு மாம்பழத்தின் விலை 19000 ரூபாய்! சாதனை செய்து காட்டிய விவசாயி!!
ஒரு கிலோ மாம்பழம் 100 ரூபாய் வரை விற்கப்படும் நிலையில் விவசாயி ஒருவர் ஒரு மாம்பழத்தை 19000 ரூபாய் விலைக்கு விற்று சாதனை நிகழ்த்தியுள்ளார். இந்த சம்பவம் ஜப்பானில் நடந்துள்ளது.
இந்தியாவில் மாம்பழங்களில் விலை அதன் வகைகளை பொருத்து ஒன்றுக் கொன்று மாறுபடும். சாதாரணமாக மாம்பழம் ஒரு கிலோ 50 ரூபாயில் இருந்து 100 ரூபாய் வரைக்கும் விற்கப்படும். இந்தியாவில் அல்போன்சா வகை மாம்பழங்கள் ஒரு கிலோ 1000 ரூபாயில் இருந்து 1200 ரூபாய் வரைக்கும் விற்பனை செய்யப்படும் நிலையில் ஜப்பானில் விவசாயி ஒருவர் ஒரு மாம்பழத்தை 19000 ரூபாய்க்கு விற்பனை செய்து அசத்தியுள்ளார்.
ஜப்பானை சேர்ந்த விவசாயி ஹிரோயிகி என்பவர் குளிர்காலம் தொடங்கும் பொழுது பசுமை இல்லத்தில் வைத்து மாமரங்களை வளர்த்துள்ளார். மாம்பழம் சீசனே இல்லாத நேரத்தில் 5000 மாம்பழங்களை அறுவடை செய்துள்ளார். எந்தவொரு பூச்சிக் கொல்லி மருந்துகளையும் பயன்படுத்தாமல் அறுவடை செய்த மாம்பழங்கள் ஒவ்வொன்றையும் 230 டாலருக்கு விற்பனை செய்துள்ளார். 230 டாலர் என்றால் இந்திய மதிப்பில் 19000 ரூபாய் இருக்கும். இவரது இந்த சாமர்த்தியமான விற்பனை இணையதளத்தில் அனைவராலும் பாராட்டப்பட்டு வைரலாகி வருகின்றது.