இந்த ரேஷன் அட்டைதாரர்களுக்கு உரிமை தொகை வழங்கப்படாது!! தமிழக அரசின் உத்தரவு!!
ரேஷன் அட்டைகள் மூலம் பொதுமக்கள் அனைவரும் மலிவான விலையில் பொருட்களை வாங்கி பயன்பெற்று வருகின்றனர். ரேஷன் கடைகளில் பருப்பு, எண்ணெய்,சர்க்கரை போன்ற பொருட்கள் மிகவும் குறைந்த விலையிலும் மற்றும் அரசி இலவசமாகவும் வழங்கப்பட்டது.
இதனால் இந்திய முழுவதும் பல கோடிக்கணக்கான மக்கள் பயனடைந்து வருகின்றனர்.நாடு முழுவதும் உள்ள ஏழை எளிய மக்கள் அனைவரும் ரேஷன் கடைகளின் மூலமாகவே மலிவான பொருட்களை வாங்கி வருகின்றனர்.
இதனை தொடர்ந்து ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு பல சலுகை வழங்கப்பட்டு வருகின்றது.அந்த வகையில் தற்பொழுது ரேஷன் கார்டு வைத்திருக்கும் குடும்ப தலைவிகளுக்கு ரூ.1000 வழங்குவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
அந்த ஆயிரம் உரிமை தொகை பெருவோர்களுக்கு பல்வேறு கட்டுபாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் ரேஷன் கார்டு பயனாளர்கள் அனைவரும் கட்டாயம் கைரேகை பதிவு செய்ய வேண்டும்.
இந்த உரிமை தொகையானது அண்ணா பிறந்த நாளையொட்டி வருகின்ற செப்டம்பர் மாதம் 15 ம் தேதி வழங்கப்பட உள்ளது.இந்த வகையில் குடும்பத்தில் உள்ள ஒருவருக்கு மட்டுமே இந்த உரிமை தொகையை பெற முடியும்.
அரசு இந்த திட்டத்தை அறிவித்த பிறகு பல பெண்கள் குடும்ப அட்டை பெறுவதற்கு விண்ணப்பித்து வருகின்றனர்.இந்த நிலையில் முறை கேடாக ஒரே வீட்டில் உள்ளவர்கள் தனித்தனியாக ரேஷன் கார்டுகளை வாங்குவதற்கு விண்ணப்பித்து வருகின்றனர்.
அதனால் தற்பொழுது அரசானது புதிதாக விண்ணப்பிக்கும் ரேஷன் அட்டை தாரர்களுக்கு உரிமை தொகை வழங்கப்படாது என்று அறிவித்துள்ளது.