அரசு ஊழியர்களுக்கு பிராவிடன்ட் ஃபண்ட் (PF) அணுகலை எளிமையாக்கும் புரட்சிகரமான நடவடிக்கையில் EPFO இறங்கி இருக்கிறது.விரைவில் இபிஎப்ஓ 3.0 (EPFO 3.0) என்ற புதிய மேம்படுத்தப்பட்ட சேவையை அறிமுகம் செய்யவும் ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு முடிவு செய்து இயங்கி வருகிறது.
அரசு ஊழியர்கள் மற்றும் தனியார் ஊழியர்களின் சம்பளத்தில் இருந்து ஒரு பகுதி ஒவ்வொரு மாதமும் அவர்களின் வருங்கால வைப்பு நிதி (PF account) கணக்கில் ஒதுக்கப்பட்டு, வரவு வைக்கப்படுகிறது. இது ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு மூலம் மேற்பார்வை செய்யப்படுகிறது. இதனை இன்னும் எளிமையானதாக மற்றும் முறையில் EPFO , தன்னுடைய பயனர்களுக்கு அவர்களே தங்களுடைய கணக்குகளை சரிபார்க்கும் வகையில் வழிவகை செய்துள்ளது.
PF அடையாள எண்ணின் மூலம் உங்கள் இருப்பு தொகை சரிபார்க்கும் வழிமுறை :-
1 . SMS :-
உங்கள் PF கணக்கில் பதிவுசெய்யப்பட்ட மொபைல் எண்ணிலிருந்து ‘7738299899’ என்ற எண்ணிற்கு EPFOHO’UANNumber’ என்ற வடிவத்தில் உங்கள் UAN எண்ணை அனுப்பி, உங்கள் தற்போதைய இருப்புத்தொகையை நேரடியாக உங்கள் மொபைலில் பெறலாம்.
2 . Missed call :-
உங்கள் PF கணக்குடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணிலிருந்து கட்டணமில்லாத எண் ஆன ‘011-22901406’ என்ற எங்களை டயல் செய்து ரிங் செய்வதன் மூலம், ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு உங்கள் PF இருப்புத்தொகையைக் கொண்ட ஒரு SMS தகவலை உங்கள் போனிற்கு அனுப்பப்படும்.
3 . Online:-
ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (Employees Provident Fund Organisation) தற்போது அதன் அதிகாரப்பூர்வ வலைத்தளம் மூலம் உங்கள் PF இருப்புத்தொகையை சரிபார்க்க அனுமதிக்கிறது. passbook.epfindia.gov.in என்ற இணையதள பக்கத்தின் மூலம், உங்கள் UAN எண்ணுடன் உள்நுழைவதன் (login) மூலம், உங்கள் கணக்கு விவரங்களை எளிதாக அணுகலாம். இந்த டிஜிட்டல் அணுகுமுறை பேலன்ஸ் மட்டுமின்றி, ஒட்டுமொத்த PF கணக்கின் பரிவர்த்தனை வரலாற்றை அறிந்து கொள்ள உதவும்.
ஒவ்வொரு மாதமும், ஒரு ஊழியரின் சம்பளத்தில் இருந்து 12% தொகை அவர்களின் PF கணக்கில் வரவு வைக்கப்படுகிறது. இதை EPFO 3.0 சேவையில் உங்கள் விருப்பம் போல மாற்றிக்கொள்ள அனுமதிக்கும் புதிய சேவையும் பயன்படுத்த கிடைக்கும் என்று கூறப்படுகிறது. EPFO 3.0 சேவை ஜூன் 2025ல் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.