EPFO: குறைந்தபட்ச ஓய்வூதியம்ரூ.7,500 வழங்க போராட்டம்!! கோரிக்கையை ஏற்குமா மத்திய அரசு!!
வருங்கால வைப்பு நிதி அமைப்பான(EPFO) EPS-95-இன் கீழ் ஓய்வு பெற்ற ஊழியர்கள் மாதந்தோறும் ரூ.1,450 ஓய்வூதியமாக பெற்று வருகின்றனர்.கடந்த 2014 செப்டம்பரில் நடைமுறைப்படுத்தப்பட்ட விதிகளின்படி குறைந்தபட்ச ஓய்வூதியமாக ரூ.1,000 வழங்கப்படுகிறது.
இந்நிலையில் குறைந்தபட்ச ஓய்வூதியத்தை ரூ.1,000 இல் இருந்து ரூ.7,500 ஆக உயர்த்திட வேண்டுமென்று தலைநகர் டெல்லியில் உள்ள ஜந்தர் பந்தில் ஓய்வூதியம் பெறுவோர் தீவிர போராட்டத்தில் ஈடுபட அழைப்பு விடுத்துள்ளனர்.
தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களின் அடிப்படைச் சம்பளத்தில் இருந்து சுமார் 12% ஓய்வூதிய கணக்கில் வரவு வைக்கப்படுகிறது.இதில் 8.33% EPS திட்டத்திலும்,3.67% EPF திட்டத்திலும் வரவு வைக்கப்படுகின்றது.இதில் 10 ஆண்டுகள் தங்களது பங்களிப்பை செலுத்தும் ஊழியர்களுக்கு ஓய்வு காலத்தில் மாதந்தோறும் குறைந்தபட்சம் ரூ.1,000 ஓய்வூதியமாக வழங்கப்படுகிறது.
இந்நிலையில் குறைந்தபட்ச ஓய்வூதியத்தை ரூ.1,000 இல் இருந்து ரூ.7,500 ஆக மாற்ற வேண்டுமென்று EPFO -க்கு போராட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்திருக்கின்றனர்.தற்பொழுது வழங்கப்பட்டு வரும் சராசரி ஓய்வூதியம் ரூ.1,450 ஓய்வூதியதாரர்களுக்கு போதுமானதாக இல்லை.குறைவான ஓய்வூதியமே கிடைப்பதால் சுமார் 3.6 மில்லியன் ஓய்வூதியதாரர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.
இந்நிலையில் கமிட்டியின் தேசிய பொதுச் செயலாளர் வீரேந்திர சிங் குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.7,500 என உயர்த்தி ஓய்வூதியதார்களுக்கு வழங்கிகிட வேண்டுமென்று அரசுக்கு கோரிக்கை விடுத்திருக்கிறார்.