சென்னை வரும் பிரதமர் மோடியை சந்திக்க ஈபிஎஸ் & ஒபிஎஸ் திட்டம்?

0
184

சென்னை வரும் பிரதமர் மோடியை சந்திக்க ஈபிஎஸ் & ஒபிஎஸ் திட்டம்?

சென்னைக்கு இன்று செஸ் ஒலிம்பியாட் போட்டிகளை தொடங்கிவைக்க பிரதமர் மோடி வருகை தர உள்ளார்.

இன்று 44-வது உலக செஸ் ஒலிம்பியாட் போட்டியின் துவக்க விழா சென்னை ஜவஹர்லால் நேரு உள் விளையாட்டரங்கத்தில்  நடைபெற இருக்கிறது. அந்நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, தமிழ் நாடு கவர்னர் ஆர் என் ரவி , முதலமைச்சர் மு க ஸ்டாலின், மத்திய மந்திரிகள், அமைச்சர்கள், பல்வேறு நாடுகளைச் சார்ந்தச் சதுரங்க விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் கலந்துக் கொள்ள உள்ளனர்.

இந்த நிகழ்ச்சிக்கு பிறகு ஆளுனர் மாளிகையில் தங்கும் மோடி, அங்கு சிறப்புவிருந்தினர்கள் மற்றும் கட்சியினரை சந்திக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் மோடியை சந்திக்க முன்னாள் முதல்வர்களான எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ பன்னீர்செல்வம் ஆகிய இருவருமே திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கட்சி சலசலப்புக்குப் பிறகு ஓபிஎஸ் இப்போது அதிமுகவில் இருந்து தனிமைப்படுத்தப் பட்டுள்ளார். இந்நிலையில் இவர்கள் இருவரும் தனித்தனியாக மோடியை சந்திக்க உள்ளதாக வெளியாகியுள்ள தகவல் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இவர்கள் இருவரும் ஓ பன்னீர்செல்வம் பாஜகவுக்கு நெருக்கமானவராக இருந்து வருகிறார். இதில் யாரை மோடி சந்திப்பார் என்ற கேள்வி எழுந்துள்ளது.

Previous articleநெல்லை மாவட்டத்தில் தற்கொலை செய்து கொண்ட மாணவியின் கடிதம்! நெஞ்சை உருக்கும் பதிவு!
Next articleபள்ளி மாணவர்களுக்கு ஒரு குட் நியூஸ் நான்கு நாட்களுக்கு இந்தப் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை!..