ஜெயலலிதாவை மிஞ்சிய எடப்பாடி: துரைமுருகன் கேள்விக்கு பதிலடி!

Photo of author

By CineDesk

சட்டமன்றத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இருந்தபோது எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கேட்கும் கேள்விக்கு ஒரே ஆளாக தனித்து நின்று பதிலடி கொடுப்பார். அவரது ஒவ்வொரு பதிலடியும் சட்டமன்றத்தில் கலகலக்க வைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது

அந்தவகையில் ஜெயலலிதாவை மிஞ்சும் வகையில் ஒரு சமயோசிதமான பதிலை கூறி முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் பாராட்டுக்களை பெற்றுள்ளார் சட்டசபையில் இன்று பட்ஜெட் மீதான விவாதம் நடந்த போது தமிழக அரசின் கடன் 4 லட்சத்து 56 ஆயிரம் கோடி ரூபாயாக உள்ளது என்றும் நாளை எங்கள் தலைவர் ஆட்சிக்கு வந்தால் இதனை எப்படி சமாளிப்பார்? என்று திமுக எம்.எல்.ஏ துரைமுருகன் கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதில் அளித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ’அந்த கவலை உங்களுக்கு தேவை இல்லை, அப்படி ஒரு நிலை உங்களுக்கு வராது’ என்று கூறினார் தமிழக முதல்வரின் இந்த பதிலை கேட்டு சட்ட சபையில் சிரிப்பலை எழுந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இதுபோன்ற பதில்களை அவ்வப்போது ஜெயலலிதா கூறி அனைவரின் கவனத்தையும் பெறுவார் என்ற நிலையில் தற்போது ஜெயலலிதாவை மிஞ்சிய வகையில் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் பதிலடி இருந்ததாக அதிமுக எம்எல்ஏக்கள் கருத்து கூறி வருகின்றனர்