ஓபிஎஸ்க்கு வந்த புதிய சிக்கல்! இபிஎஸ் தந்த அதிர்ச்சி வைத்தியம்
மழை நின்றாலும் தூவானம் விடாது என்பது போல, இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் இடையே ஒற்றை தலைமை விவகாரமும் விடுவதாக இல்லை.
அதிமுகவில் ஜெயலலிதா மறைவிற்கு பின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் என்ற பதவிகளை உருவாக்கினாலும், இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் இடையே மறைமுகமாக ஒருவரை ஒருவர் தாக்கி அறிக்கைகள் விட்ட வண்ணம் இருந்தனர்.
கடந்த வருடம் 2022 ஜூலை மாதம் 11ம் தேதி இபிஎஸ் தனது ஆதரவாளர்களை திரட்டி தனக்கு பெரும்பாலான ஆதரவு இருப்பதாக கூறி தன்னை கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளராக அறிவிக்க வைத்தார்.
எடப்பாடி கூட்டிய பொதுக்குழு தீர்மானங்களை ரத்து செய்ய கோரி ஓபிஎஸ் தரப்பில் அவ்வப்போது நீதிமன்றத்தை நாடுவது அணைவரும் அறிந்த ஒன்று.
பொதுக்குழு குறித்து கடந்த மாதம் உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு எடப்பாடிக்கு சாதகமாக அமைந்ததை எதிர்த்து, ஓபிஎஸ் தரப்பில் சென்னை உயர்நீதி மன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவிற்கு, இபிஎஸ் பதில் மனு தாக்கல் செய்துள்ளார்.
இபிஎஸ் தாக்கல் செய்த மனுவில், அதிமுக கட்சிக்கே சம்பந்தமில்லாத மனோஜ் பாண்டியன் என்பவர் தாக்கல் செய்துள்ள ஏற்றுகொள்ளக்கூடியது அல்ல என்று கூறியுள்ளார்.
அதிமுகவின் உச்சபட்ச அதிகாரம் கொண்ட அமைப்பான பொதுக்குழு தான் ஒற்றை தலைமைக்கும், பொதுச்செயலாளர் பதவியை உருவாக்குவதற்கும் அதிகாரம் படைத்துள்ள அமைப்பு என்று தெரிவித்துள்ள இபிஎஸ், இந்த பொதுக்குழுவிற்கு உள்ள அதிகாரங்கள் குறித்து கேள்வி எழுப்புவதற்கு மனுதாரரான மனோஜ் பாண்டியனுக்கு அதிகாரம் இல்லை என்று தெரிவித்துள்ளார்.
பொதுக்குழுவில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின் படி தான் இடைக்கால பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டதை, அங்கிகரிக்கும் வகையில் ஜீ20 மாநாட்டில் கலந்து கொள்வதற்கு தனக்கு அந்த அமைப்பு அழைப்பு விடுத்திருப்பதையும், பதில் மனுவில் எடப்பாடி சுட்டி காட்டியுள்ளார்.
இதனிடையே எந்த ஒரு நீதிமன்றமும், ஒரு அரசியல் கட்சியின் உள்விவகாரங்களில் தலையிட முடியாது எனவும், பெரும்பான்மையாக எடுத்த முடிவில், சிறுபான்மை ஆதரவுடையோர் முடக்கிவிட முடியாது எனவும் எடப்பாடி கூறியுள்ளார்.
பொதுக்குழுவில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு, பல நிகழ்வுகளில் ஏற்றுக்கொள்ளப்பட்ட நிலையில், 8 மாதம் கடந்த பின்பு எதிர் மனு தாரர் மனோஜ் பாண்டியன் உள்நோக்கத்துடன் தாக்கல் செய்துள்ள மனுவினை அபாராதத்துடன் தள்ளுபடி செய்திட வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி சென்னை உயர்நீதி மன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்துள்ளார்.