பாஜக-வுடனான உறவுக்கு ஒரேடியாக முடிவு கட்டிய இபிஎஸ்!! புதிய கூட்டணிக்கு அடிப்போடும் அண்ணாமலை!!

Photo of author

By Rupa

பாஜக-வுடனான உறவுக்கு ஒரேடியாக முடிவு கட்டிய இபிஎஸ்!! புதிய கூட்டணிக்கு அடிப்போடும் அண்ணாமலை!!

ஈரோட்டில் இடைத்தேர்தல் நடைபெற போகும் பட்சத்தில் இரட்டை இலை ஓபிஎஸ் அணிக்கு கிடைக்குமா அல்லது இபிஎஸ் அணிக்கு கிடைக்குமா என்பதை தெரிந்து கொள்ள இன்னும் ஒரு நாள் உள்ள நிலையில் இன்று எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தங்களது கட்சி வேட்பாளரை அறிவித்தார்.

அதிமுகவின் இரண்டு முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்த தென்னரசு என்பவரை தற்பொழுது ஈரோடு இடைத்தேர்தலில் வேட்பாளராக அறிவித்து இன்று இடைத்தேர்தலுக்கான அலுவலகம் திறந்து வைக்கப்பட்டது.

இந்த அலுவலகத்தின் பதாகை தான் தற்பொழுது பாஜகவிற்கும் அதிமுகவிற்கும் இனி எந்த  சம்பந்தமும் இல்லை என்பதை வெட்ட வெளிச்சமாக காட்டியுள்ளது.இந்த பதாகையில் தற்பொழுது அதிமுகவுடன் கூட்டணியில் இருக்கும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜிகே வாசன் மற்றும் புரட்சி பாரதம் கட்சியின் பூவே ஜகன் மூர்த்தி ஆகியோரின் படங்கள் இடம்பெற்றுள்ள நிலையில், பாஜகவின் படம் ஏதும் இடம்பெறவில்லை.

அது மட்டுமல்லாமல் பாஜகவுடன் உள்ள கூட்டணிக்கு எப்பொழுதும் தேசிய ஜனநாயக கூட்டணி என்றுதான் கூறுவர், அதுவே காங்கிரஸ் உடனான கூட்டணிக்கு தான் தேசிய முற்போக்கு கூட்டணி என கூறுவர்.தற்பொழுது அதிமுக பணிமனை பதாகையில் தேசிய ஜனநாயக கூட்டணி என்று இல்லாமல், தேசிய முற்போக்கு கூட்டணி என்னும் பெயர் இடம் பெற்றுள்ளது.

இது இவர்களுக்கு உள்ள இறுதி முடிவை தெள்ளம் தெளிவாக காட்டுகிறது என அரசியல் சுற்று வட்டாரங்கள் கூறுகின்றனர். இன்று எடப்பாடி பழனிச்சாமி வேட்பாளரை அறிவித்திருக்கும் பட்சத்தில் அண்ணாமலை டெல்லி செல்ல உள்ளார்.

அதிமுகவுடன் கூட்டணி குறித்து ஓரிரு நாட்களில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அது குறித்து ஆலோசனை செய்ய தான் மூத்த தலைவர்களை காண அண்ணாமலை டெல்லி செல்வதாகவும் கூறுகின்றனர்.மேலும் புதிய கூட்டணி வைப்பது குறித்து கூட ஆலோசனை செய்து வரலாம் என்றும் கூறுகின்றனர்.