ஓ பி ரவீந்தரநாத் அதிமுக எம்.பி. இல்லை… சபாநாயகருக்கு எடப்பாடி பழனிச்சாமி கடிதம்!
அதிமுகவில் ஒற்றைத்தலைமை சம்மந்தமாக ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் இடையே மோதல் முற்றியுள்ளது.
அதிமுகவில் கடந்த சில மாதங்களாக ஒற்றைத்தலைமைக்கான மோதல் உருவாகியுள்ளது. இது சம்மந்தமாக நடந்த பொதுக்குழுவில் மோதல் மேலும் முற்றியது. அதையடுத்து சென்னை ராயப்பேட்டையில் இருக்கின்ற அதிமுகவின் தலைமை அலுவலகத்தில் கடந்த 11ஆம் தேதி பன்னீர்செல்வம் மற்றும் பழனிச்சாமி உள்ளிட்டோரின் ஆதரவாளர்களுக்கிடையே கடுமையான மோதல் உண்டானது. இதில் அதிமுகவின் அலுவலகத்தை பன்னீர்செல்வம் கைப்பற்றிய நிலையில்; அங்கே எடப்பாடி பழனிச்சாமி மற்றும் பன்னீர்செல்வம் தரப்பினர் நடுவே மோதல் உண்டானது.
அதன் பின்னர் ஈபிஸ், ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்களை நீக்குவதாக அறிவிக்க, ஓபிஎஸ் ‘நான் அவர்களை கட்சியை விட்டு நீக்குகிறேன்’ என்று அறிவித்தார். மேலும் ஈபிஎஸ் தரப்பில் ஓபிஎஸ்-ன் மகனான ஓ பி ரவீந்தரநாத்தையும் நீக்குவதாக அறிவிக்கபப்ட்டது.
இந்நிலையில் இன்று அதிமுக அலுவலகம் ஈபிஎஸ் வசம் ஒப்படைக்கப்பட்ட நிலையில் ‘ரவீந்தரநாத், அதிமுக எம்.பி. இல்லை என்று கூறி மக்களவை சபாநாயகர் ஓம்பிர்லாவுக்கு எடப்பாடி பழனிச்சாமி கடிதம் எழுதியுள்ளார். இது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.