முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி செய்த காரியத்தால் தமிழ் ஆர்வலர்கள் மகிழ்ச்சி! முதல்வர் என்ன செய்தார் தெரியுமா!

Photo of author

By Sakthi

தலைநகரம் புதுடெல்லியில் தமிழ் பள்ளி ஒன்றை எட்டாவதாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்றைய தினம் திறந்து வைக்க இருக்கின்றார்.

டில்லி மயூர் விஹர் பேஸ் ஆகிய 3 பகுதியில் கட்டப்பட்டு இருக்கின்ற தமிழ் பள்ளியை இன்று காலை 10.45 மணிக்கு காணொளி காட்சி மூலம் திறந்து வைக்கின்றார் முதல்வர்.

காணொலிக் காட்சி மூலமாக நடைபெறும் இந்த நிகழ்ச்சியில், மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால், தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், ஆகியோர் பங்கேற்கிறார்கள்.

ஏற்கனவே புதுடெல்லியில், தமிழ் கல்விக் கழகம் சார்பாக ஏழு பள்ளிக்கூடங்கள் செயல்பட்டு வருகின்றது.

அந்த வகையிலே இந்த எட்டாவது பள்ளிக்கூடத்திற்கு ரூபாய் 5 கோடி நிதி ஒதுக்கப்பட்டு, தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கடந்த வருடம் அடிக்கல் நாட்டி இருந்தார்.

இதற்கான முதற்கட்ட பணிகள் முடிந்து இருக்கின்ற நிலையில், இப்போது அந்தப் பள்ளி திறக்கப்பட இருக்கின்றது.

இந்த பள்ளியில் 37 அறைகள் இருக்கின்றன, நூலகம், ஆய்வுக்கூடம், வகுப்பறை, ஆகிய சகல வசதிகளுடன் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

சிறிது காலம் முன்பாக நிதிப்பற்றாக்குறை காரணமாக, குஜராத் மாநிலத்தில் தமிழ்ப்பள்ளி மூடப்பட இருப்பதாக அறிவிப்பு வெளியாகி இருந்த நிலையில், அதற்கான நிதியை தாங்களே ஏற்றுக்கொள்வதாகவும், பள்ளியை மூட வேண்டாம் என்றும், தமிழக அரசு தெரிவித்தது நினைவுகூரத்தக்கது.