மத்திய அரசு செய்த அந்த காரியத்தால்! அவதிப்படும் திமுக பயங்கர அப்செட்டில் ஸ்டாலின்!

0
68

2021-2023 வருடத்திற்கான நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும், நாடாளுமன்ற மேம்பாட்டு நிதியை உடனே மத்திய அரசு வழங்க வேண்டும் என்று தென்சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்திருக்கின்றார்.

சென்னை சின்னமலை, பகுதியில் அமைந்திருக்கும் சென்னை அரசு மேல்நிலை பள்ளியில் தென்சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து 50 லட்சம் மதிப்பில் புதிய உள்விளையாட்டு அரங்கம் கட்டப் படுவதற்கான, அடிக்கல் நாட்டு விழா நடந்தது.

இந்நிகழ்வில், தென் சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன், மற்றும் திமுக தெற்கு மாவட்ட செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான சுப்பிரமணியன், ஆகியோர் கலந்து கொண்டு அடிக்கல்லை நாட்டினார்.

அதன் பின் செய்தியாளர்களை சந்தித்த தமிழச்சி தங்கபாண்டியன் வைரஸ் பரவல் காரணமாக, நாடாளுமன்ற தொகுதியின் நிதி அடுத்த 2 வருடங்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கின்றது .இது மக்களை தான் பாதிக்கும் எங்களை நம்பி வாக்களித்தவர்களுக்கு நாங்கள் என்ன பதில் சொல்வோம்.

ஆகவே அந்த நிதியை மீண்டும் உடனே கொடுக்க வேண்டும் என்னுடைய தொகுதியை பொறுத்தவரையில், வடகிழக்கு பருவமழை பேரிடர் காலங்களில் மிக அதிகமாக சைதாப்பேட்டை, கூவம் ,வேளச்சேரி ஏரி, ஆகிய பகுதிகளில் அதிகமாக பாதிப்பு ஏற்படும்.

ஆகவே அதை கருத்தில் கொண்டு ஏரிகளை உடனடியாக தமிழக அரசு தூர்வார வேண்டும் என்று கோரிக்கை வைத்திருப்பதாகவும் தெரிவித்தார்.

50 லட்சம் மதிப்பில் கட்டப்பட இருக்கும் பள்ளி மாணவர்களுக்கான இந்த விளையாட்டு அரங்கத்தை அடுத்த சில மாதங்களில், சட்டமன்றத் தேர்தலில் வெற்றிபெற்று முதல்வராக வர இருக்கின்ற தலைவர் ஸ்டாலின் திறந்து வைப்பார் என்று தெரிவித்தார்.