இபிஎஸ்-ஓபிஎஸ் சந்திக்க வாய்ப்பே இல்லை! ஓபன்னீர்செல்வம் இணைப்பு எப்போதும் நடக்காது முன்னாள் அமைச்சரின் பரபரப்பு பேட்டி!  

Photo of author

By Amutha

இபிஎஸ்-ஓபிஎஸ் சந்திக்க வாய்ப்பே இல்லை! ஓ பன்னீர்செல்வம் இணைப்பு எப்போதும் நடக்காது முன்னாள் அமைச்சரின் பரபரப்பு பேட்டி! 

ஓபிஎஸ் இபிஎஸ் சந்திக்க 100 சதவீதம் வாய்ப்பு இல்லை ஓ.பன்னீர்செல்வத்தின் இணைப்பு என்பது நடக்கவே நடக்காது என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பரபரப்பு பேட்டி அளித்துள்ளார்.

ஈரோடு கிழக்கு தொகுதியில் திமுகவினர் பணம் பட்டுவாடா செய்வதாக தேர்தல் ஆணையர் சத்ய பிரதசாகுவிடம்  முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் புகார் அளித்த பின் செய்தியாளர்களை சந்தித்து  கூறுகையில்

பழனிச்சாமியும் பன்னீர்செல்வமும் சந்திப்பதற்கு 100% வாய்ப்பே இல்லை. ஓபிஎஸ் தரப்பினர் குப்புற விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்கின்றனர். திமுகவின் பீ டீமாக சேர்ந்து இரட்டை இலை சின்னத்தை முடக்கும் முயற்சியில் ஓபிஎஸ் தரப்பினர் ஈடுபடுகின்றனர். இரட்டை இலை சின்னத்தை முடக்க முயற்சி செய்து முடியாத நிலையில் இவ்வாறு பொய் தகவல்களை பரப்புகின்றனர்.

ஓபிஎஸ் ஆல் இரட்டை இலையை முடக்க முடியவில்லை. அவர் இரட்டை இலைக்கு வாக்கு சேகரிப்பது முரண்பாடான ஒன்றுதான். இரட்டை இலைக்கு வாக்கு சேகரிப்பேன் என்று கூறுபவர்கள் தென்னரசு பெயரை சொல்ல மறுப்பதேன்? இபிஎஸ் தரப்பு வேட்பாளர் தென்னரசுவின் பெயரை சொல்ல வாய் வலிக்கிறதா?   இதுவே முரண்பாடாக உள்ளது. அதிமுக தொண்டர்கள் பன்னீர்செல்வத்தின் இத்தகைய செயலை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். என அவர் குற்றம் சாட்டினார்.

மேலும் அவர் கூறுகையில் ஓபிஎஸ் குறித்த செங்கோட்டையனின் பேச்சு அவரது தனிப்பட்ட கருத்தாக இருக்கலாம். அரசியலில் எது வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் நடக்கலாம். ஆனால் அதிமுகவில் மட்டும் ஓ.பன்னீர்செல்வத்தின் இணைப்பு என்பது எப்போதும் நடக்கவே நடக்காது.  என திட்டவட்டமாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

இபிஎஸ் ஓபிஎஸ் சந்திப்பு தொடர்பாக எது வேண்டுமானாலும் நடக்கலாம் என்று ஓபிஎஸ் ஆதரவாளர் கு.பா.கிருஷ்ணன் கூறிய நிலையில் ஜெயக்குமார் அதற்கு பதில் அளித்துள்ளார்.