மெட்ரோ ரயில் பயணிகளுக்கான குட் நியூஸ்! தொடங்கப்பட்ட புதிய சேவை!

0
117

மெட்ரோ ரயில் பயணிகளுக்கான குட் நியூஸ்! தொடங்கப்பட்ட புதிய சேவை! 

மெட்ரோ ரயிலில் செல்லும் பயணிகளுக்காக ஆலந்தூரில் இருந்து போரூர் வரை புதிய சேவை ஒன்று தொடங்கப்பட்டுள்ளது.

சென்னை அறிஞர் அண்ணா ஆலந்தூர் மெட்ரோ ரெயில் நிலையத்திலிருந்து போரூரில் உள்ள டி.எல்.எப். சைபர் சிட்டியில் பணியாற்றுபவர்களின் போக்குவரத்து தேவையை கருத்தில் கொண்டு தனியார் நிறுவன வாகன இணைப்பு சேவையை, மெட்ரோ ரெயில் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர் மு.அ.சித்திக் போரூரில் இன்று மரக்கன்றுகளை நட்டு கொடியசைத்து துவக்கி வைத்தார். 

அந்த அவர் பேசியதாவது,

மெட்ரோ ரயிலில் பயணம் செய்யும் பயணிகள் நலன் கருதி பல்வேறு விதமான இணைப்பு சேவைகளை மெட்ரோ ரெயில் நிலையங்களில் வழங்கப்பட்டு வருகின்றன. அதன் படி தற்போது, போரூரில் இருந்து ஆலந்தூர் வரை பாஸ்ட் டிராக் நிறுவனத்துடன் இணைந்து தனியார் வாகன இணைப்பு சேவை தொடங்கப்பட்டு உள்ளது. 

வாரந்தோறும் திங்கள்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை ஆலந்தூரில் இருந்து போரூர் வரை இயக்க  ஏசி வசதி கொண்ட 12 இருக்கைகளுடன் கூடிய நான்கு வேன்கள் தயார் செய்யப்பட்டுள்ளன. இதில் ஒரு நபருக்கான கட்டணம் ரூ.40 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. க்யூ ஆர் கோடு மற்றும் செல்போன் செயலி மூலம் மட்டுமே வாகனத்தில் ஏறும்போது இந்த கட்டணம் வசூல் செய்யப்படுகிறது. எனக் கூறினார்.

மேலும் அவர் கூறுகையில் பயணிக்கும் போது  விரைவான, பாதுகாப்பான, திறன்மிக்க மற்றும் நிரந்தர பொதுப் போக்குவரத்தை கருத்தில் கொண்டு, 128 மெட்ரோ ரெயில் நிலையங்களுடன் 119 கிலோ மீட்டர் நீளத்திற்கு ரூ.63 ஆயிரத்து 246 கோடி மதிப்பில் சென்னை மெட்ரோ ரெயிலின் 2-ம் கட்டமைப்பு வருகிற 2026-ம் ஆண்டு மே மாதத்திற்குள் கட்டி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.  அதற்கான பணிகள் தொடங்கி தற்போது  தீவிரமாக நடந்து வருகிறது. அந்த பணிகள் நிறைவடைந்த உடன் சென்னையில் உள்ள அனைத்து இடங்களும் மெட்ரோவில் இணைக்கப்படும். ‘மெட்ரோ கனெக்ட்’ என்ற திட்டத்தின் கீழ் பெரிய அலுவலக வளாகங்களில், கல்லூரி, வணிக வளாகங்கள் போன்ற இடங்களிலும் இணைப்பு சேவையை வழங்க  விரும்புவதாக அவர் தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில், இயக்குநர் ராஜேஷ் சதுர்வேதி, டி.எல்.எப். நிறுவன செயல் இயக்குனர் அமித் குரோவர், பாஸ்ட் டிராக் நிறுவன இயக்குனர் அம்பிகாபதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். துணை தலைவர் கோகுல்நாதன் நன்றி கூறினார்.