சமீப நாட்களாக அதிமுக கட்சியில், வரும் தேர்தலில் தலைமைப் பொறுப்புக்கும், முதல்வர் வேட்பாளராக இபிஎஸ், ஓபிஎஸ் யாரை நியமிப்பது போன்ற கருத்துக்கள் வியூகங்கள் வெளியாகி வந்தன.
இந்த நிலையில், இது குறித்து தற்போது அதிமுக தலைமைப் பொறுப்புகள் பற்றி இபிஎஸ், ஓபிஎஸ் இருவரும் கூட்டாக அறிக்கை விடுத்துள்ளனர்.
கட்சி நிர்வாகிகளின் ஒப்புதல் இல்லாமல் தலைமைப் பொறுப்பினை அறிவிக்க கூடாது என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர் இபிஎஸ் கூட்டாக தெரிவித்துள்ளனர்.
இதில், “நாம் அனைவரும் ஒரு தாய் மக்களாக உள்ளோம். நம் மக்களுக்கு ஆற்றவேண்டிய கடமை இன்னும் ஏராளமாக உள்ளது. இனிவரும் காலங்களில் அதனை சிறப்பாக ஆட்சி செய்து நிறைவேற்றுவோம். தொடர் வெற்றியின் மூலம் ஒன்று பட்டு உழைக்கும் நேரமாக உள்ளது.
கடந்த சில நாட்களாக கழக நிர்வாகிகள் சிலர் கட்சியின் எந்த பின்னணி இல்லாமல் அவர்கள் தானாகவே தலைமைப் பொறுப்பு குறித்து கூறிய கருத்து விவாதப் பொருளாக ஆகி விட்டது.
இது அன்றைய ஜெயலலிதா அம்மையாரின் காலத்தைப் போன்று ராணுவ கட்டுப்பாட்டுடன் தலைமையின் முடிவுக்கு கட்டுப்பட்டு இருக்க வேண்டும். கட்சியின் கொள்கை குறித்தும், கூட்டணி குறித்தும், ஜெயலலிதா காட்டிய பாதையில், ஜனநாயகத்தின் முறைப்படி கழகத்தின் தலைமை யார் என்பதை பற்றி கட்சித் தொண்டர்களின் மன உணர்வுகளை எதிரொலிக்கும் வகையில் சிறப்பான முடிவுகள் மேற்கொள்ளப்படும்.
கட்சியில் எந்த சலசலப்பும் இன்றி, எதிர்க்கட்சிகள் தரும் பேராசைக்கு இணங்காமல் ஒன்றுபட்டு மக்கள் பணியிலும், கழக பணியிலும் ஈடுபட வேண்டும்.
மேலும் உங்கள் தனிப்பட்ட கருத்துக்களை. இதுகுறித்து மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். கருத்துக் கணிப்புகள் மூலம் எதுவும் நிகழப் போவதில்லை. கட்சியின் சாதனைகள் செயல் திட்டங்களைப் பற்றி மட்டுமே முன்வையுங்கள்” என்று அவர்கள் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.